ARTICLE AD BOX
முறுக்கு தமிழகத்தின் பாரம்பரியமான பலகாரமாக விளங்குகுகிறது. அரிசி மாவில் மொறுமொறுவென முறுக்கு வட்ட வட்டமாக எப்படி செய்வது என்று இங்கே பார்க்கலாம்.
அரிசி மாவில் மொறுமொறுவென சுவையான வட்ட முறுக்கு செய்வது ரொம்ப ஈஸி.
முறுக்கு செய்ய தேவையான பொருட்கள்:
அரிசி மாவு 1 கப்
தூள் உப்பு கால் டீஸ்பூன்
உப்பு சேர்க்காத வெண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்
ஒரு சிட்டிகை பெருங்காயத் தூள்
சீரகம் கால் டீஸ்பூன்
அரிசி மாவில் மொறுமொறுவென முறுக்கு செய்முறை
முதலில் முறுக்கு மாவு பிசைய ஒரு பாத்திரம் எடுத்துக்க்கொள்ளுங்கள், அதில் 1 கப் நன்றாக நைசாக முறுக்கு செய்வதற்காக அரைத்த அரிசி மாவு எடுத்துக்கொள்ளுங்கள், அதனுடன் கால் டீஸ்பூன் தூள் உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள். உப்பு இல்லாத வெண்ணெய் 1 டேபிள்ச்பூன் அளவு சேர்த்துக்கொள்ளுங்கள். அடுத்து, ஒரு சிட்டிகை பெருங்காயத் தூள் சேர்த்துக்கொள்ளுங்கள், 1 டீஸ்பூன் அளவு சீரகத்தை கைகளில் தேய்த்து சேர்த்துக்கொள்ளுங்கள். இப்போது எல்லாவற்றையும் நன்றாகக் கலந்துவிடுங்கள். அடுத்து தண்ணீர் அரை கப் அளவு எடுத்துக்கொண்டு சிறிது சிறிதாக ஊற்றி மாவு பிசையுங்கள், நன்றாக முறுகு பிழிவதற்கான படத்தில் மாவு பிசைந்ததும், முறுக்கு பிழிவதற்கு ஒரு தூய்மையான துணி எடுத்துக்கொள்ளுங்கள்.
முறுக்கு பிழியும் குழாய் எடுத்துக்கொள்ளுங்கள். அதில், ஸ்டார் போட்ட ஒற்றைக் கண் குழாய் எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது முறுக்கு குழாயில் மாவு போட்டு, வட்டமாக முறுக்கு பிழியுங்கள்.
அதற்கு பிறகு, ஸ்டவ்வைப் பற்ற வைத்து, நீங்கள் வழக்கம் போல் வானலியில் எண்ணெய் ஊற்றி நன்றாகக் காய்ந்ததும் வட்டமாகப் பிழிந்து வைத்திருக்கும் முறுக்கை எடுத்து எண்ணெயில் போட்டு வெந்த உடன் எடுத்து விடுங்கள். உங்களுக்கு பிரவுன் நிறத்தில் வேண்டும் என்றால் மீண்டும் ஒருமுறை எண்ணெயில் போட்டு வேக வைத்து லேசாக பிரவுன் நிறம் வந்ததும் எடுங்கள்.
அவ்வளவுதான், அரிசி மாவில் மொறுமொறுவென சுவையான வட்ட முறுக்கு தயார். உங்கள் வீட்டில் இப்படி செய்து பாருங்கள்.