ARTICLE AD BOX
Pushpa: இயக்குனர் சுகுமார் மற்றும் நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் நடிப்பில் வெளியான புஷ்பா 1 தி ரைஸ், புஷ்பா 2 தி ரூல் திரைப்படங்கள் மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்து வசூலை வாரி குவித்து இருந்தாலும், ஹைதராபாத்தில் உள்ள யூசுஃப் குடாவைச் சேர்ந்த ஒரு அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் இந்தப் படத்தால் கோவமடைந்துள்ளார். வி6 நியூஸ் வெளியிட்ட வீடியோவில் கல்வி ஆணையத்திடம் பேசிய அந்த ஆசிரியை புஷ்பா படங்களின் மீதான தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.
தோற்றுப் போனது போல் உள்ளது
அந்த வீடியோவில், "மாணவர்கள் பள்ளியில் மேோசமாக நடந்து கொள்வதைக் கண்டு தான் நிர்வாகியாக தோல்வியடைந்தது போல் உணர்கிறேன் என்று ஆசிரியை கூறினார். "மாணவர்கள் ஏற்றுக் கொள்ள முடியாத சிகை அலங்காரங்களை வைத்துக்கொண்டு, மோசமாக பேசி வருகின்றனர்.
நாம் கல்வியில் மட்டும் கவனம் செலுத்தி இது போன்ற விஷயங்களை புறக்கணிக்கிறோம். இது அரசுப் பள்ளிகளில் மட்டுமல்ல, தனியார் பள்ளிகளிலும் உள்ள நிலைமை. இதன் காரணமாக ஒரு நிர்வாகியாக, நான் தோல்வியடைந்தது போல் உணர்கிறேன்” என்று அவர் கூறினார்.
பெற்றோர்கள் கவலைப்படவில்லை
மேலும் பேசிய அவர், ஒரு ஆசிரியராக, மாணவர்களைத் தண்டிக்க தன்னால் முடியாது. ஏனெனில் அது அவர்களுக்கு அழுத்தம் கொடுத்து அவர்களை தற்கொலைக்குத் தூண்டலாம். . இந்தப் பிரச்சினைகளைப் பற்றிப் பேச பெற்றோர்களை அழைத்தாலும் அவர்கள் கவலைப்படுவதில்லை என்றார்.
மாணவர்களின் நடத்தையில் ஊடகங்களுக்கும் பங்கு உள்ளது. நாம் ஊடகங்களையே குற்றம் சொல்ல வேண்டும். என் பள்ளியில் பாதி மாணவர்கள் புஷ்பா படத்தால் மோசமாகிவிட்டனர். ஆனால் இதுபற்றி எல்லாம் எந்தக் கவலையும் இன்றி அந்தப் படத்தை சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது” என்று அவர் குற்றம்சாட்டினார்.
இணையத்தின் எதிர்வினை
அவரது இவந்தப் பேச்சு வைரலான நிலையில், பலரும் கலவையான கருத்துகளை கூறி வருகின்றனர். சிலர் எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) தளத்தில் ஆசிரியையின் கருத்துடன் உடன்பட்டனர், மற்றவர்கள் அதை விமர்சிக்கவும் செய்தனர். எக்ஸ் தள பயனாளி ஒருவர், “அவர் சொன்னது உண்மை. சிலர் இந்த வகையான படங்களைப் பார்த்து பாதிக்கப்படுவார்கள்” என்று கருத்து தெரிவித்தார்.
மற்றொருவர், “நல்லது செய்யாவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் ஒரு படம் அனைத்தையும் மோசமாக்கக் கூடாது” என்று ஆசிரியையின் கருத்துக்கு உடன்பட்டார்.
கிண்டலடிக்கும் மக்கள்
இருப்பினும், சிலர் ஆசிரியைக்கு எதிரான கருத்துகளை பதிவிட்டு வந்தனர். ஒருவர், “சார் படம் பார்த்து ஏழை மாணவர்களுக்கு இலவசமாகப் படிக்கச் சொல்லலாம் (Then teach students for free after watching SIR)” என்று எழுதினார்.
மற்றொருவர் கேம் சேஞ்சர் மற்றும் மகர்ஷி படங்களைப் பார்த்த பிறகு மாணவர்கள் ஐஏஎஸ் அதிகாரியாகவோ அல்லது விவசாயியாகவோ ஆசைப்படுவார்களா என்று கேட்டுள்ளார்.
புஷ்பா படங்கள் பற்றி
இயக்குநர் சுகுமாரின் புஷ்பா: தி ரைஸ் படம் 2021 ஆம் ஆண்டு வெளியானது மற்றும் புஷ்பா 2: தி ரூல் படம் 2024 ஆம் ஆண்டு வெளியானது. இந்தப் படங்களில் அல்லு அர்ஜுன் ஒரு கூலித் தொழிலாளியாகவும், பின்னர் செம்மரக் கட்டை கடத்தல்காரராகவும் மாறுகிறார்.
ராஷ்மிகா மந்தனா மற்றும் பகத் பாசில் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலைப் பெற்றதுடன், நல்ல விமர்சனங்களையும் பெற்றது. புஷ்பா 2: தி ரூல் 2024 ஆம் ஆண்டின் அதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படமாகவும் மாறியது.

டாபிக்ஸ்