Photo Album: வளைகாப்பு முடிந்த கையேடு வேளாங்கண்ணி ஆலயம் வந்த சீரியல் நடிகை

1 day ago
ARTICLE AD BOX

வளைகாப்பு முடிந்த கையோடு வேளாங்கண்ணி ஆலயம் வந்த சீரியல் நடிகை கேபிரியலின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

சுந்தரி சீரியல்

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சுந்தரி சீரியலில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் தான் நடிகர் கேப்ரியல்லா.

சினிமா மற்றும் சீரியலில் நடிக்க வேண்டும் என்றால் கொஞ்சம் கலராக இருக்க வேண்டும் என்ற மாயையை உடைத்தெரிந்தவர் இவராக பார்க்கப்படுகிறார்கள்.

கடந்த 4 வருடங்களாக தமிழ் பெண்களுக்கும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை சுந்தரி சீரியல் பெற்றுக் கொடுத்துள்ளது.

சுந்தரி சீரியலில் நடிப்பதற்கு முன்னர் கேப்ரியல்லா “கலக்கப்போவது யாரு ” என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். ஆனால் இந்த நிகழ்ச்சியிலிருந்து பாதியில் வெளியேற்றப்பட்டார்.

வளைகாப்பு நிகழ்வு

இந்த நிலையில், சுந்தரி சீரியலில் கதாநாயகியாக நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது முதல் பாகம் நன்றாக ஓடிய வேளையில் இரண்டாம் பாகம் ஆரம்பிக்கப்பட்டது.

அதிலும் இவரே கதாநாயகியாக நடித்தார், ஆனால் இவருக்கு இரண்டாம் பாகத்தில் குழந்தையொன்று மாத்திரம் கொடுக்கப்பட்டது. 2 தினங்களுக்கு முன்னர் இரண்டாம் பாகமும் முடிவுக்கு வந்துவிட்டது. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் கேப்ரியல்லா தற்போது கர்ப்பமாக இருக்கிறார்.

நிறைமாதக்கர்ப்பிணியாக இருக்கும் கேப்ரியல்லாவுக்கு வளைகாப்பு நிகழ்வு நடந்து முடிந்துள்ளது. இந்த நிகழ்விற்கு பல சின்னத்திரை பிரபலங்கள் நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.

இதன்போது எடுத்து கொண்ட படங்கள் இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளதுடன், வாழ்த்துக்களையும் பதிவிட்டு வருகிறார்கள்.

வேளாங்கண்ணி சென்ற நடிகை 

வளைகாப்பு முடிந்த கையோடு கேபிரியல்  வேளாங்கண்ணி ஆலயத்திற்கு சென்றிருக்கிறார். அங்கு எடுத்து கொண்ட படங்கள் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாக உள்ளது. புகைப்படங்களை பார்த்த சின்னத்திரை ரசிகர்கள், குழந்தை ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் என வாழ்த்தி வருகிறார்கள்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

Read Entire Article