NEEK Movie Box Office: லட்சங்களில் சுருங்கிய தனுஷின் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம்.. 4ம் நாள் வசூல்..

1 day ago
ARTICLE AD BOX

 இந்தப் படத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ், அனிகா, பிரியா வாரியர் என ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கின்றன. காதலுக்கும் காதல் தோல்விக்கும் இடையே தவிக்கும் இளம் தலைமுறையினரை பற்றிய படம் இது பலரும் புகழ்ந்து வருகின்றனர்.

நீக் வசூல்

இந்தப் படம் முதல் நாள் வசூல் விவரங்கள் குறித்து திரைப்படங்களின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்களை வெளியிடும் சாக்னில்க் வெளியிட்டுள்ளது. அதன்படி, நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் வெளியான 4 ஆம் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் 0.55 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக கூறியுள்ளது. இந்தப் படம் மொத்தமாக தமிழ்நாட்டில் 5.07 கோடி ரூபாய் வசூலித்துள்ளது தெரியவருகிறது. இதே வசூல் தான் இந்திய அளவிலும் எதிரொலித்துள்ளதாகத் தெரிகிறது.

தனுஷ் இயக்கத்தில் வெளிவந்த இந்த படம், ரிலீஸ் ஆன நாளில் இருந்து முதல் 3 நாட்கள் ஒரே மாதிரியான வசூலையே பெற்று வந்தன. 4ம் நாளில் அதன் வசூல் பாதியாக குறைந்தது. படத்திற்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல மவுசு இருந்தாலும் தியேட்டரில் சென்று படம் பார்க்க பெரிதும் அவர்கள் விரும்பாததால் 4ம் நாள் வசூலே லட்சங்களாக சுருங்கியது.

நீக் பாடல்கள்

தனுஷின் சகோதரி மகன் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியார், மாத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உள்ளிட்டோர் நடிக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்தப்படத்தில் இருந்து முன்னதாக வெளியான ‘கோல்டன் ஸ்பாரோ’ பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப்பாடலில் நடிகை பிரியங்கா மோகன் கேமியோ ரோலில் நடித்திருந்தார். இந்த பாடல் யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது சிங்கிளான ‘காதல் ஃபெயில்’ தனுஷ் குரலில் வெளியானது. இதையடுத்து, ஏடி, புள்ள என அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.

காதலில் தொடங்கி காதலில் முடியும்

கதையின் நாயகனாக வரும் பவிஷின் பெற்றோரான சரண்யாவும்- ஆடுகளம் நரேனும் மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்கள். அதற்காக பெண் பார்க்கும் படலம் நடக்கிறது. அப்படி ஒரு பெண்ணை பார்க்கும் போது, அது பவிஷ் படித்த கல்லூரியில் படித்த பெண். நாங்கள் நண்பர்கள் என்று அவர்களுக்குள் பேச ஆரம்பித்ததும், ப்ளாஷ்பேக் ஒன்று திறக்கிறது. இருவருக்கும் முன்பு ஒரு காதல் இருப்பதும், அந்த காதல் ஏன் ப்ரேக் ஆனது என்பது தான் அந்த ப்ளாஷ்பேக். ஆனால் ஏன் ப்ரேக் ஆனது என்பதை சொல்ல வேண்டாம் என இருவரும் முடிவு செய்கிறார்கள்.

கோபம் முதல் பாதி

அது தான் படத்தின் கதையையும், திரைக்கதையும் நகர்த்துகிறது. அதை இன்றைய தலைமுறையின் உரையாடலாக நகர்த்துகிறார்கள். எல்லாம் முடிந்து ஒரு மைண்ட் செட் வரும் போது, தன் முன்னாள் காதலியின் திருமண அழைப்பிதழ் கிடைக்கிறது. அப்போது முன்னாள் காதலனின் மனநிலை எப்படி இருக்கும் என்கிற மனநிலையில், முதல் பாதி நிறைவடைகிறது.

இரண்டாம் பாதி

இரண்டாம் பாதியில் முதல் காதலி உடனான காதல் என்ன ஆகிறது? பெற்றோர் பாரத்த பெண்ணின் நிலை என்ன? அவளின் காதல் என்ன ஆனது? என இன்றைய இளசுகளை குறி வைத்து இரண்டாம் பாதியை முடித்திருக்கிறார் தனுஷ். காதல், நட்பு என்கிற இரட்டை குதிரையில் இன்பச் சுற்றுலா போக சுயற்சித்திருக்கிறார் தனுஷ். மீண்டும் சொல்கிறோம், இது ஒரு வழக்கமான காதல் கதை தான். அப்படி மட்டுமே இதை அணுக முடியும். அதனால், பெரிதாக எதிர்பார்க்க முடியாது.

Malavica Natarajan

TwittereMail
மாளவிகா நடராஜன், 2017ம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். காட்சி (விஷூவல்), டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். பெரியார் பல்கலைகழகத்தில் பட்டம் பெற்ற இவர், சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர். தமிழ் இந்துஸ்தான் டைம்ஸ் தளத்தில் 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் சினிமா, புகைப்படத்தொகுப்பு சார்ந்த செய்திகளில் தனது பங்களிப்பை கொடுத்து வருகிறார்.
Whats_app_banner
தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
Read Entire Article