ARTICLE AD BOX
MWC 2025-ல் அறிமுகமான டாப் 4 ஸ்மார்ட்போன்கள்.. Nothing முதல் HMD வரை.. எந்த மாடல்கள்? என்ன விலை?
மார்ச் 6 ஆம் முடிவடையும் எம்டபுள்யூசி 2025 (MWC 2025) என்று சுருக்கமாக அழைக்கப்டும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் (Mobile World Congress) நிகழ்வில்.. பல நிறுவனங்கள் தத்தம் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தன; காட்சிப்படுத்தின. அவைகளில் டாப் 5 ஸ்மார்ட்போன்களை பற்றிய தொகுப்பே இது:
01. நத்திங் போன் 3ஏ (Nothing Phone 3a):
- பேக் பேனலில் கிளிஃப் லைட்டிங் செட்டப்
- 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.77 இன்ச் AMOLED டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 சிப்செட்
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்-ஐ அடிப்படையாக நத்திங் ஓஎஸ் 3.1

- ஹாரிசாண்டல் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா
- 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா
- புதிய 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ சென்சார்
- 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 50W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 5,000mAh பேட்டரி
நத்திங் போன் 3ஏ ஸ்மார்ட்போனின் இந்திய விலை விவரங்கள்:
8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் - ரூ.22,999 (வங்கி சலுகைகள் உட்பட)
8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் - ரூ.24,999 (வங்கி சலுகைகள் உட்பட)
இந்த ஸ்மார்ட்போன் ஒயிட், பிளாக் மற்றும் ப்ளூ ஆகிய மூன்று கலர் ஆப்ஷன்களில் வருகிற மார்ச் 11 ஆம் தேதி முதல் பிளிப்கார்ட் வழியாக வாங்க கிடைக்கும்.
02. நத்திங் போன் 3ஏ ப்ரோ
- பேக் பேனலில் கிளிஃப் லைட்டிங் செட்டப்
- 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.77 இன்ச் AMOLED டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 சிப்செட்
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்-ஐ அடிப்படையாக நத்திங் ஓஎஸ் 3.1
- சர்க்குலர் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா
- 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா
- 50 மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ சென்சார்
- 50 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 50W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 7.5W ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவு
- 5,000mAh பேட்டரி
நத்திங் போன் 3ஏ ப்ரோ ஸ்மார்ட்போனின் இந்திய விலை விவரங்கள்:
8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் - ரூ.27,999 (வங்கி சலுகைகள் உட்பட)
8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் - ரூ.29,999 (வங்கி சலுகைகள் உட்பட)
12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் - ரூ.31,999 (வங்கி சலுகைகள் உட்பட)
இந்த ஸ்மார்ட்போன் க்ரே மற்றும் பிளாக் ஆகிய 2 கலர் ஆப்ஷன்களில் வருகிற மார்ச் 15 ஆம் தேதி முதல் பிளிப்கார்ட் வழியாக வாங்க கிடைக்கும்.
03. ஷாவ்மீ 15 அல்ட்ரா:
எம்டபிள்யூசி 2025 இல் அறிமுகமான ஷாவ்மீ 15 அல்ட்ரா மாடல் ஆனது ஷாவ்மீ 15 உடன் சேர்ந்து வருகிற மார்ச் 11 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்விரு மாடல்களும் குறிப்பிட்ட தேதியில், இந்திய நேரடி மதியம் 12 மணிக்கு அறிமுகப்படுத்தப்படும் என்று ஷாவ்மீ இந்தியா அறிவித்துள்ளது.
ஷாவ்மீ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- டூயல் சிம் (நானோ + நானோ) ஆதரவு
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான ஷாவ்மீயின் ஹைப்பர் ஓஎஸ் 2
- குவால்காமின் 3என்எம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்
- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.73-இன்ச் WQHD+ (1440 x 3200 பிக்சல்ஸ்) குவாட் கர்வ்டு LTPO AMOLED டிஸ்பிளே
- லைக்கா பிராண்டால் ட்யூன் செய்யப்பட்ட 4 கேமரா செட்டப்
- 1 இன்ச் டைப் LYT-900 சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடனான 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா
- 50-மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா
- ஓஐஎஸ் மற்றும் 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 50-மெகாபிக்சல் சோனி IMX858 டெலிஃபோட்டோ கேமரா சென்சார்
- ஓஐஎஸ் மற்றும் 4.3எக்ஸ் ஆப்டிகல் ஜூம் உடன் 200-மெகாபிக்சல் ஐசோசெல் HP9 பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா
- 90W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 80W வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவு
- 5,410mAh சிலிக்கான் கார்பன் பேட்டரி
- ஏரோஸ்பேஸ் கிரேடு கிளாஸ் ஃபைபரை பயன்படுத்தி கட்டமைக்கப்பட்டுள்ளது.
- தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான ஐபி68 ரேட்டிங்
- இன்-டிஸ்ப்ளே அல்ட்ராசோனிக் பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர்
04. எச்எம்டி பியூஷன் எக்ஸ்1:
- ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட்
- 8ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை ஸ்டோரேஜ்
- 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.56 இன்ச் எச்டி டிஸ்பிளே
- 108 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா + 2 மெகாபிக்சல் சென்சார்
- 50 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 33W பாஸ்ட் சார்ஜ் ஆதரவு உடனான 5000mAh பேட்டரி
இது இளம் வயதினர் உட்பட இளம் பயனர்கள் இண்டர்நெட்டை பாதுகாப்பாக ஆராய உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்கீழ் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளின் லோக்கேஷன் சேஃப்டி அம்சங்களை அணுகலாம், காண்டாக்ட்களை அங்கீகரிக்கலாம், குறிப்பிட்ட ஆப்களுக்கான அணுகலை தடுக்கலாம் மற்றும் தங்கள் குழந்தையின் ரியல்டைம் லோக்கேஷனை பார்க்கலாம். இந்த அம்சங்கள் எச்எம்டி-யின் எக்ஸ்ப்ளோரா பெற்றோர் கட்டுப்பாடுகள் சேவையின்கீழ் கிடைக்கும். விலை மற்றும் இந்திய அறிமுகம் குறித்து எந்த தகவலும் இல்லை.