ARTICLE AD BOX
தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் அவரது கடைசி படமான, 'ஜனநாயகன்' பட, ஓடிடி ரிலீஸ் உரிமையை பிரபல நிறுவனம் பெரிய தொகைக்கு கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் தற்போது தனது கடைசி படமான 'ஜனநாயகன்' படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில், விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும், பாபி தியோல், கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ், நரைன், பிரியாமணி, ஸ்ருதி ஹாசன், மமிதா பைஜூ, ரெபே மோனிகா ஜான், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கே வி என் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு, அனிருத் இசையமைத்துள்ளார். கிட்டத்தட்ட ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்தப் படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. எனினும் அரசியல் நோக்கத்துடன் வரும் 2026ஆம் ஆண்டு தள்ளி வைக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
Jana Nayagan: 25 வருடங்களுக்கு பின் தளபதியின் 'ஜனநாயகன்' படத்தில் இணைந்த குஷி பட நடிகர்!

முழுக்க முழுக்க அரசியல் கதைக்களத்தை மையப்படுத்திய இந்தப் படம், ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என்று பான் இந்தியா படமாக இந்தப் படத்தை ரிலீஸ் பண்ண படக்குழு
திட்டமிட்டுள்ளது. இந்தப் படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை செவன் ஸ்க்ரின் ஸ்டூடியோ நிறுவனம் ரூ.100 கோடி கொடுத்து கைப்பற்றியுள்ளது.

இதே போன்று வெளிநாட்டு விநியோக உரிமையை பார்ஸ் பிலிம் நிறுவனம் ரூ.78 கோடி கொடுத்து கைப்பற்றியுள்ளது. இது தவிர கேரளா, ஆந்திரா, உள்ளிட்ட மாநிலங்களிலும் இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருவதாக கூறப்படுகிறது. இது விஜய்யின் கடைசி படம் என்பதால், இதற்க்கு முன் விற்பனை செய்யப்பட்ட தொகையை விட, அதிக தொகையை தயாரிப்பு நிறுவனம் டிமாண்ட் செய்வதாகவும் சில தகவல்கள் வெளியாகி உள்ளது.
விஜய்யின் ஜனநாயகன் படத்தில் அட்லீ, நெல்சன், லோகேஷுக்கு இப்படி ஒரு ரோலா?

இன்னும் 25 நாட்களில் படத்தை முடிக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அதன் பின்னர் தீவிர அரசியல் கவனம் செலுத்த தயாராகி உள்ளார். இந்த நிலையில் தான், ஷூட்டிங் முடிவதற்கு முன்பே இந்த படத்தின் ஓடிடி உரிமைக்கு கடும் போட்டி நிலவி வந்தது. மேலும் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, நெட்பிளிக்ஸ் நிறுவனம் தான் பல கோடி கொடுத்து இந்த படத்தை கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது.