ARTICLE AD BOX
ஜோதிடத்தின் படி ஒவ்வொரு நபரின் பிறப்பின் நேரம் அவர்களின் வாழ்க்கையை தீர்மானிக்கிறது. அதை வைத்தே ஜாதகம் எழுதப்படுகிறது என்பது அனைவரும் அறிந்ததே. அதே போன்று நீங்கள் பிறந்த தேதியை வைத்தே, நியூமராலஜி கணிக்கப்படுகிறது. இப்படி இருக்கையில் நீங்கள் பிறந்த கிழமை என்ன சொல்கிறது என்று தெரியுமா? அதுவும் குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை பிறந்தவர்களின் ஆளுமை எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..
பொதுவாகவே ஞாயிற்றுக்கிழமை பிறந்தவர்கள் நாய் படாத பாடு படுவார்கள் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களின் இயல்பான குணங்கள் என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.
ஞாயிற்றுக்கிழமை பிறந்தவர்களின் ராசியின் அதிபதி சூரியன் ஆகும். இவர்கள் அதிகம் அமைதியான சுபாவம் கொண்டவர்களாகவே இருப்பார்களாம். மேலும் இவர்கள் என்ன சொன்னாலும் மிகுந்த சிந்தனையுடனே சொல்லும் ஆளுமையை கொண்டிருப்பார்களாம்.
ஞாயிற்றுக்கிழமை பிறந்தவர்கள் இயற்கையிலேயே உணர்திறன் உடையவர்களாக இருப்பார்கள். அவர்கள் ஏதாவ்து ஒன்றை பற்றி மோசமாக உணர்ந்தால், அதை மனதில் கொள்வார்கள். அவர்கள் அதை பற்றி பல நாட்களாக யோசித்து கொண்டே இருப்பார்கள். மேலும் இவர்கள் வசீகரமான ஆளுமை கொண்டவர்கள். இந்த மக்கள் மற்ற நபரை விரைவாக ஈர்க்கிறார்கள். எப்போதும் வித்தியாசமான ஒன்றை தேர்ந்தெடுத்து தங்கள் வேலையை முழு முயற்சியுடன் செய்கிறார்கள். இந்த கிழமை பிறந்தவர்கள் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நல்ல உறவை பேண எப்போதும் முயற்சிப்பார்கள்.
நீங்கள் ஞாயிற்றுக்கிழமை பிறந்திருந்தால் உங்கள் குணங்களுடன் இவை ஒத்து போகிறதா என்று தெரிந்து கொள்ளுங்கள். மேலும் ஞாயிற்றுக்கிழமை பிறந்த நபர்களுக்கு இதை ஷேர் செய்யுங்கள்.