ARTICLE AD BOX
’ஜம்மு எக்ஸ்பிரஸ்’ என்று அழைக்கப்படும் அதிவேகப் பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக், காயம் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்முவைச் சேர்ந்த உம்ரான் மாலிக், 2021 ஐபிஎல்-இல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு விளையாடத் தொடங்கினார். மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் தொடர்ச்சியாக பந்துகளை வீசியதால் கவனம் ஈர்த்தார். அடுத்த ஆண்டிலேயே இந்திய அணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். டி20, ஒருநாள் போட்டிகளில் விளையாடினார்.
ஐபிஎல் 2025க்கான ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 75 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. ஆனால் மார்ச் 22 அன்று நடைபெறவுள்ள முதல் போட்டியில் கேகேஆர் அணி விளையாடவுள்ளது. இந்நிலையில் உம்ரான் மாலிக் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது கேகேஆர் ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது. மாலிக்குக்கு மாற்றாக சேத்தன் சக்காரியா விளையாடுவார் என்று கேகேஆர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.