IND vs NZ: சுப்மன் கில் முதல் ரச்சின் ரவீந்திரா வரை! கலக்கப்போகும் 6 வீரர்கள்!

2 hours ago
ARTICLE AD BOX

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் சாம்பியன்ஸ் டிராபி 2025 அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டதால், இந்த போட்டி சம்பிரதாயமானதாக இருந்தாலும், குரூப் ஏ புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடிக்க இரு அணிகளும் போராடும்.

சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் இறுதி குரூப் போட்டியில் இந்தியாவும், நியூசிலாந்தும் நாளை துபாய் சர்வதேச மைதானத்தில் மோதுகின்றன. இதில் சுப்மன் கில், விராட் கோலி, ரச்சின் ரவீந்திரா ஆகியோர் முக்கிய வீரர்களாக உள்ளனர்.  இந்த இரண்டு அணிகளும் ஏற்கெனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டதால், இந்த போட்டி சம்பிரதாயமானதாக இருந்தாலும், குரூப் ஏ புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடிக்க இரு அணிகளும் போராடும். 

இரு அணிகளும் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றுள்ளன.  சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் இறுதி குரூப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ள நிலையில், கவனிக்க வேண்டிய ஆறு வீரர்களைப் பற்றி பார்க்கலாம்.
 

சுப்மன் கில்

சுப்மன் கில் சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் சிறந்த ஃபார்மில் இருக்கிறார். வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் 112 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெற செய்தார். பாகிஸ்தானுக்கு எதிராகவும் 52 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார். துபாயில் நடைபெற்ற இந்த இரண்டு போட்டிகளிலும் இந்தியா ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கில்லின் ஃபார்ம் இந்திய அணிக்கு ஒரு பெரிய பலமாக அமைந்துள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியிலும் அவர் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கில் ஒரு அதிரடியான தொடக்க வீரர். அவர் ஆரம்பத்திலேயே பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு இந்திய அணியின் இன்னிங்ஸை நிலைநிறுத்த முடியும். கில் ஒருமுறை செட்டில் ஆகிவிட்டால், துபாய் ஆடுகளத்தில் நியூசிலாந்து அணிக்கு அவர் ஒரு பெரிய அச்சுறுத்தலாக இருப்பார்.

வில்லியம் ஓ’ரூர்கே

நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் வில்லியம் ஓ’ரூர்கே சிறந்த பாஸ்ட் பவுலர். 23 வயதான இவர், தற்போது 12.80 சராசரியுடன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி நியூசிலாந்து அணியின் முன்னணி விக்கெட் டேக்கராக உள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 9 ஓவர்களில் 3/47 என்ற சிறந்த புள்ளிவிவரங்களை பதிவு செய்தார்.

வங்கதேச பேட்ஸ்மேன்களையும் தனது கட்டுக்கோப்பான லைன் மற்றும் லென்த்தால் குடைச்சல் கொடுத்தார். இது இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும். குறிப்பாக துபாய் ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், ஓ’ரூர்கே இந்திய அணிக்கு எதிராக தாக்கத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா vs நியூசிலாந்து: இந்திய அணியில் 4 மாற்றங்கள்! களமிறங்கும் சிக்சர் மன்னன்!

விராட் கோலி

விராட் கோலி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சதம் அடித்ததன் மூலம் நல்ல ஃபார்மில் இருக்கிறார். பெரிய போட்டிகளில் அணியை முன்னின்று வழிநடத்தும் வீரராக உள்ளார். சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் இரண்டு போட்டிகளில் 122 ரன்கள் எடுத்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவர் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடினார். நியூசிலாந்துக்கு எதிராக 31 போட்டிகளில் 58.75 சராசரியுடன் 1645 ரன்கள் குவித்துள்ளார். இதில் ஆறு சதங்களும் அடங்கும். விராட் கோலியின் ஃபார்மை கருத்தில் கொண்டு, அவர் இந்திய அணிக்கு ஒரு முக்கிய வீரராக இருப்பார்.

ரச்சின் ரவீந்திரா

ரச்சின் ரவீந்திரா வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் 105 பந்துகளில் 112 ரன்கள் எடுத்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது நெற்றியில் காயம் அடைந்தார். இதனால் தொடரில் இருந்து விலகினார். காயம் காரணமாக பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டியிலும் விளையாடவில்லை.

காயத்தில் இருந்து மீண்ட முதல் போட்டியில் விளையாடிய ரவீந்திரா, நியூசிலாந்து அணியை வெற்றி பெறச் செய்தார். 24 வயதான ரவீந்திரா ஸ்பின் மற்றும் வேகத்தை சமமாக எதிர்கொள்ளும் திறன் கொண்டவர். அவரது ஆல்ரவுண்டர் திறன் நியூசிலாந்து அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.

ஹர்ஷித் ராணா

இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங்கிற்கு பதிலாக 22 வயதான ஹர்ஷித் ராணாவை அணியில் எடுத்ததற்கு விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், ஹர்ஷித் ராணா வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில் சிறப்பாக விளையாடி விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார். இரண்டு போட்டிகளில் 15.25 எகானமி விகிதத்தில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் இரண்டாவது அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக உள்ளார். வங்கதேசத்துக்கு எதிராக 7.4 ஓவர்களில் 3/31 என்ற சிறந்த ஸ்பெல்லை பதிவு செய்தார். 

300வது ஒருநாள் போட்டியில் சாதனை நாயகன்! விராட் கோலியின் 5 சாதனைகள்

கேன் வில்லியம்சன்

கேன் வில்லியம்சன் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்துக்கு எதிரான போட்டிகளில் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தார். ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடிய அவர், சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் தடுமாறி வருகிறார். அனுபவம் மற்றும் அழுத்தமான சூழ்நிலையில் இன்னிங்ஸை நிலைநிறுத்தும் திறன் காரணமாக வில்லியம்சன் நியூசிலாந்து அணிக்கு ஒரு முக்கிய வீரராக இருப்பார். கேன் வில்லியம்சன் இந்திய அணிக்கு எதிராக 29 போட்டிகளில் 44.11 சராசரியுடன் 1147 ரன்கள் குவித்துள்ளார். இதில் ஒரு சதமும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Read Entire Article