ARTICLE AD BOX
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பகுதியில் உள்ள பட்லி பாடா எனும் பகுதியில் அமைந்திருக்கும் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஒரு விருந்து நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அதில், பல்வேறு தரப்பினர் கலந்து கொண்ட நிலையில் 37 வயதான ஷரவன் லீகா மற்றும் அவரது நண்பர் விகாஸ் மேனன் (32 வயது) இருவரும் சென்று உள்ளனர்.
நிகழ்ச்சி நன்றாக தான் சென்று கொண்டிருந்தது. திடீரென நண்பர்கள் இருவருக்கும் இடையில் ஏதோ தகராறு ஏற்பட்டு அது வாக்குவாதமாக மாறியது. ஒரு கட்டத்தில் இருவரது வாக்குவாதமும் எல்லை மீறி சென்றது. அப்போது ஆத்திரத்தில் இருந்த விகாஸ் மேனன் தனது நண்பனின் காதை கடித்துள்ளார்.
வலி தாங்காமல் ஷரவன் கத்தி கதறியுள்ளார். ஆனால் எதையும் கண்டு கொள்ளாமல் அழுத்தமாக விகாஸ் கடித்ததில் காது துண்டாகியது. அப்போது சற்றும் பதற்றம் அடையாமல் அந்த காதை கடித்து அவர் முழுங்கிவிட்டார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இதனைக் கண்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். சரவன் காதிலிருந்து ரத்தம் வழிய துவங்கியதும் அவரை மீட்டு மருத்துவமனையில் கொண்டு சென்று சேர்த்தனர்.
இதையும் படிங்க: சண்டையில் நண்பரின் காதை கடித்து விழுங்கிய நட்பு.. வாக்குவாதம் முற்றி பயங்கரம்.!
தற்போது அவருக்கு அங்கே தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் விகாஷ்மேனன் போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றார்.
இதையும் படிங்க: மும்பையில் இருந்து, லிப்ட் கேட்டே.. கும்பமேளாவுக்கு வந்த இளைஞர் சாதனை.!