ARTICLE AD BOX
இந்தியா-நியூசிலாந்து போட்டி (India vs New Zealand match)
ICC Champions Trophy 2025: பாகிஸ்தான், துபாயில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்திய அணி வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தி விட்டு அரையிறுதிக்குள் நுழைந்து விட்டது. இந்திய அணி கடைசி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியுடன் ((India vs New Zealand) வரும் 2ம் தேதி துபாயில் மோதுகிறது. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்த போட்டி நடக்கிறது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் ஐசிசி போட்டிகளில் இந்தியா அதிகபட்சமாக 19 முறை அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்தியா, நியூசிலாந்து போட்டி நடக்கும் துபாய் ஆடுகளம் மெதுவான தன்மை கொண்டது என்பதால் பேட்டிங் செய்வது கடினம். இதனால் ஸ்பின்னர்கள் ஆட்டத்தில் முக்கிய பங்கு வகிப்பார்கள்.
துபாய் பிட்ச் ரிப்போர்ட் (Dubai Pitch Report)
துபாய் மைதானத்தில் இதுவரை 60 ஒருநாள் சர்வதேச போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. அதில் 22 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணி வெற்றி பெற்றுள்ளது. 36 போட்டிகளில் சேஸிங் செய்த அணி வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள 2 போட்டிகள் முடிவு இல்லாமல் முடிந்துள்ளன. இந்த மைதானத்தில் நடந்த இந்தியா-பாகிஸ்தான் மற்றும் இந்தியா-வங்கதேசம் போட்டிகளில் பனி ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
ஆகையால் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் பனிப்பொழிவு இருக்க வாய்ப்பில்லை என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கருதுகின்றனர். டாஸ் வென்றால் எந்த கேப்டனும் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்யலாம். துபாயில் மழை பெய்ய வாய்ப்பில்லை என்பது நல்ல செய்தியாகும். ஞாயிற்றுக்கிழமை இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் அதிகபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வானத்தில் மேகங்கள் இருக்காது, சூரியன் பிரகாசிக்கும். காற்றின் ஈரப்பதம் 45 சதவீதமாக இருக்கலாம், மேலும் மணிக்கு 31 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
இந்திய அணி உத்தேச பிளேயிங் லெவன் (Indian Team Playing 11)
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி
நியூசிலாந்து அணி உத்தேச பிளேயிங் லெவன் (INew Zealand Playing 11)
மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), வில் யங், டெவோன் கான்வே, கேன் வில்லியம்சன், ரச்சின் ரவீந்திரா, டாம் லாதம், க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மேட் ஹென்றி, கைல் ஜேமிசன், வில்லியம் ஓ'ரூர்க்.