IND Vs ENG T20i Series 2025 (Photo Credit: @BCCI X) (2)

ஜனவரி 22, ஈடன் கார்டன் (Sports News): இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து (Team England) கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் (IND Vs ENG T20i Series 2025), 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் (IND Vs ENG ODI Series 2025) கிரிக்கெட் தொடரிலும் விளையாடவுள்ளது. இந்த போட்டிகளில் டி20 பிரிவில் முதல் ஆட்டம் மேற்குவங்கம் மாநிலத்தில் உள்ள கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் வைத்து இன்று இரவு 7 மணிக்கு தொடங்கியது. இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) தொலைக்காட்சி, ஓடிடியில் டிஸ்னி ஹாட் ஸ்டார் (Disney Hotstar) பக்கங்களில் நேரலையில் பார்க்கலாம்.

இந்திய அணிக்கு 132 ரன்கள் டார்கெட்:

முதல் ஆட்டத்தில் பேட்டிங்கை தேர்வு செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டையும் இழந்து 132 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து அணியின் சார்பில் விளையாடியவர்களில், ஜோஸ் பட்டர் 44 பந்துகளில் 68 ரன்னும், ஜோப்ரா 10 பந்துகளில் 12 ரன்னும், ஹேரி புரூக் 14 பந்துகளில் 17 ரன்னும் அதிகபட்ஷமாக அடித்திருந்தனர். எஞ்சிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறியதால், இங்கிலாந்து அணி நிலைதடுமாறி சொற்ப அளவிலான ரன்களை மட்டுமே குவித்தது. இந்திய அணியின் சார்பில் பந்து வீசியவர்களில் அர்ஷிதீப், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டையும், வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டையும் கைப்பற்றி இருந்தனர். IND Vs ENG T20i: இந்திய அணிக்கு 132 ரன்கள் இலக்கு; தடுமாறிய இங்கிலாந்து., அசத்திய இந்தியா.! 

இந்திய அணி அசத்தல் வெற்றி:

அதனைத்தொடர்ந்து, இந்திய அணி 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்திய கிரிக்கெட் அணி சூரியகுமார் யாதவால் வழிநடத்தப்பட்டு, கொல்கத்தாவில் வெற்றி கிடைத்தது. இந்திய அணியின் சார்பில் விளையாடியவர்களில் சஞ்சு சாம்சன் 20 பந்துகளில் 26 ரன்னும், அபிஷேக் ஷர்மா 34 பந்துகளில் 79 ரன்களும், திலக் வர்மா 16 பந்துகளில் 19 ரன்களும் அடித்து அசத்தி இருந்தனர். இதனால் இந்திய கிரிக்கெட் அணி 12.5 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு, 7 விக்கெட் வித்தியாசத்தில் 133 ரன்கள் அடித்து வெற்றி அடைந்தது. சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக்கின் ஆட்டம் அரங்கத்தை அதிரவைத்தது.

அபிஷேக் ஷர்மாவின் (Abhishek Sharma) அசத்தல் செயல்:

Abhishek Sharma weaving magic and how! 🪄

Follow The Match ▶️ https://t.co/4jwTIC5zzs #TeamIndia | #INDvENG | @IamAbhiSharma4 | @IDFCFIRSTBank pic.twitter.com/5xhtG6IN1F

— BCCI (@BCCI) January 22, 2025

சஞ்சு சாம்சனின் (Sanju Samson) சிதறல் ஆட்டங்கள்:

4⃣, 4⃣, 6⃣, 4⃣, 4⃣

Dial S for Stunning, Dial S for Sanju Samson 🔥 🔥

Follow The Match ▶️ https://t.co/4jwTIC5zzs#TeamIndia | #INDvENG | @IamSanjuSamson | @IDFCFIRSTBank pic.twitter.com/F6Ras6wYeb

— BCCI (@BCCI) January 22, 2025