IND vs AUS: வரலாறு படைத்த விராட் கோலி.. செமி பைனலில் பிரம்மாண்ட கேட்ச் சாதனை.. நம்பர் 1 ஃபீல்டர்

6 hours ago
ARTICLE AD BOX

IND vs AUS: வரலாறு படைத்த விராட் கோலி.. செமி பைனலில் பிரம்மாண்ட கேட்ச் சாதனை.. நம்பர் 1 ஃபீல்டர்

Published: Tuesday, March 4, 2025, 19:24 [IST]
oi-Aravinthan

துபாய்: சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி இமாலய சாதனைகளை படைத்திருக்கிறார். கேட்ச் பிடிப்பதில் அவர் இரண்டு மாபெரும் சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2025 சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டது. விராட் கோலி இரண்டு கேட்சுகளை பிடித்தார்.

அதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் மொத்தம் 161 கேட்சுகளை அவர் பிடித்து இருக்கிறார். மேலும் இந்திய அணிக்காக மூன்று வித கிரிக்கெட் வடிவங்களிலும் ஒட்டுமொத்தமாக 336 கேட்சுகளை அவர் பிடித்து இருக்கிறார். இதன் மூலம் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக கேட்ச் பிடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

IND vs AUS Virat Kohli Champions Trophy 2025 India 2025

முன்பு ராகுல் டிராவிட் 334 கேட்சுகள் பிடித்ததே அதிகபட்சமாக இருந்தது. அதை 336 கேட்சுகள் பிடித்து முறியடித்து இருக்கிறார் விராட் கோலி. சர்வதேச அளவில் ராஸ் டெய்லர் 351 கேட்சுகளையும், ரிக்கி பாண்டிங் 364 கேட்சுகளையும், மஹேலா ஜெயவர்தனே 440 கேட்சுகளையும் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. விராட் கோலி சர்வதேச அளவில் நான்காவது இடத்தில் இருக்கிறார்.

இதைத் தவிர, ஒருநாள் போட்டிகளில் மட்டும் சர்வதேச அளவில் அதிக கேட்ச் பிடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி இரண்டாவது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார். இந்தப் பட்டியலில் இலங்கையின் மஹேலா ஜெயவர்தனே 218 கேட்சுகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். ரிக்கி பாண்டிங் 160 கேட்சுகளுடன் இரண்டாவது இடத்தில் இருந்தார். தற்போது அவரை முந்தி இருக்கும் விராட் கோலி தற்போது 161 கேட்சுகளை பிடித்து இருக்கிறார்.

 குல்தீப் யாதவ் செய்த செயல்.. எகிறிய கோலி.. வசவு வார்த்தையால் திட்டிய ரோஹித் சர்மா IND vs AUS: குல்தீப் யாதவ் செய்த செயல்.. எகிறிய கோலி.. வசவு வார்த்தையால் திட்டிய ரோஹித் சர்மா

இந்தப் போட்டியில் விராட் கோலி ஆஸ்திரேலிய அணியின் ஜோஷ் இங்லிஸ் மற்றும் நாதன் எல்லிஸ் ஆகியோரது கேட்சுகளை பிடித்தார். ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 264 ரன்கள் மட்டுமே எடுத்தது.

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.
Allow Notifications
You have already subscribed
Story first published: Tuesday, March 4, 2025, 19:24 [IST]
Other articles published on Mar 4, 2025
English summary
IND vs AUS Semi final: Virat Kohli Sets new Catch Record in ODIs During Champions Trophy Semi-final
Read Entire Article