ICC Champions Trophy 2025 (Photo Credit: @isachinthakur02 X)

ஜனவரி 18, மும்பை (Sports News): ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025ஆம் (ICC Champions Trophy 2025) ஆண்டு தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதனுடன் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டி தொடருக்கான அணியும் அறிவிக்கப்பட்டு உள்ளது. பிசிசிஐ தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா அணியை அறிவித்தனர். WPL 2025 Schedule: மகளிர் பிரீமியர் லீக் 2025; போட்டி அட்டவணை வெளியீடு..!

15 பேர் கொண்ட இந்திய அணி வீரர்கள்:

ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், பும்ரா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா.

முகமது சமி வருகை:

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் பும்ரா, முகமது ஷமி என 2 முன்னணி வேகப் பந்துவீச்சாளர்கள் பெயரும் இடம் பெற்றுள்ளது. பும்ரா தற்போது காயத்தில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறார். இங்கிலாந்து ஒருநாள் தொடரில் பும்ராவுக்கு பதிலாக வேகப் பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணா இடம் பெற்றுள்ளார். மற்றபடி, சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியில் இடம் பெற்ற அதே இந்திய அணிதான் இங்கிலாந்து ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது.

இந்திய அணி வீரர்கள்:

🚨 SQUAD ANNOUNCEMENT 🚨

India have named their 15-member squad for the #ChampionsTrophy2025#CT25 #CricketTwitter #CT2025 pic.twitter.com/CRLhkM0TGG

— Cricbuzz (@cricbuzz) January 18, 2025