ARTICLE AD BOX
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் இன்று காலை 6 மணியளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இது குறித்து நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் (NCS) எக்ஸ் தளத்தில், ``வங்காள விரிகுடாவில் 19.52°N அட்சரேகை மற்றும் 88.55°E தீர்க்கரேகையில் பூமியின் மேற்பரப்பிலிருந்து 91 கிலோமீட்டர் ஆழத்தில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது" என்று அதிகாரபூர்வமாகப் பதிவிட்டிருக்கிறது.
EQ of M: 5.1, On: 25/02/2025 06:10:25 IST, Lat: 19.52 N, Long: 88.55 E, Depth: 91 Km, Location: Bay of Bengal.
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjdtw0 @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/J6q53lzNd1
இந்தத் திடீர் நிலநடுக்கம் கொல்கத்தாவில் வசிப்பவர்களிடத்தில் சிறிது அச்சத்தை ஏற்படுத்தினாலும், இதுவரையில் பொருட்சேதமோ, உயிர்ச் சேதமோ ஏதேனும் ஏற்பட்டிருக்கிறதா என்று அதிகாரிகள் தரப்பிலிருந்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதேபோல, இரண்டு நாள்களுக்கு (ஞாயிறு) முன்புதான் இமாச்சலப் பிரதேசத்தின் மாண்டி மாவட்டத்தில், காலை 8 மணியளவில் 3.7 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. இதில், யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Rajini: மலேசியாவுக்கு கல்விச் சுற்றுலா சென்ற அரசுப் பள்ளி மாணவர்கள்... அமைச்சரிடம் வாழ்த்திய ரஜினி!