ARTICLE AD BOX
அசைவ உணவுகள் என்றாலே தமிழர்களுக்கு தனிப்பிரியம் உண்டு. ஏனெனில் இதன் தனித்துவமான சுவை சைவ உணவுகளை காட்டிலும் அதிகம் விரும்ப வைக்கிறது. நமது வீட்டில் செய்யும் சைவ உணவு வகைகள் ஹோட்டல்களில் செய்யப்படும் உணவுகளை விட அதிக சுவையுடனும், மணமுடன் இருக்கும். ஆனால் இன்றைய தலைமுறையினர் வீட்டில் வைக்கும் எளிதான குழம்புகளை கூட கற்று வைத்துக் கொள்வதில்லை. நாம் அடிக்கடி வெளியே சாப்பிடுவதால் உடல் நல பிரச்சனைகளும் ஏற்படலாம். எனவே ஈசியான முறையில் மட்டன் குழம்பு செய்வது எப்படி என்பதை இங்கு காண்போம்.
தேவையான பொருட்கள்
அரை கிலோ மட்டன்
கால் கப் துருவிய தேங்காய்
20 முதல் 25 சின்ன வெங்காயம்
ஒரு டேபிள்ஸ்பூன் மிளகாய்த் தூள்
ஒரு டீஸ்பூன் சோம்பு தூள்
2 டேபிள்ஸ்பூன் மல்லித் தூள்
2 பட்டை
தேவையான அளவு நல்லெண்ணெய்
செய்முறை
முதலில் மட்டனை சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். மட்டனைத் துண்டுகளாக்கி சுத்தம் செய்து கறியில் உள்ள கொழுப்புடன் எடுத்துக் கொள்ளவும். பின்னர் சின்ன வெங்காயத்தை தோலுரித்து இரண்டாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு மிக்சி ஜாரில் துருவிய தேங்காய் மாறும் கசகசா ஆகியவற்றை சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் குக்கரில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பட்டையை போட்டு தாளிக்க வேண்டும். பின்னர் இதில் நறுக்கிய சின்ன வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் சுத்தம் செய்து வைத்திருக்கும் கறியை கொழுப்புடன் சேர்த்துப் போட்டு நன்கு கிளறவும். பிறகு உப்பு சேர்த்து பிரட்டவும். உப்பு சேர்த்து பிரட்டுவதால் கறியில் நன்கு உப்பு சேர்ந்துவிடும். கறி சற்று நிறம் மாறியதும் மல்லித் தூள், சோம்பு தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்க்கவும். மிதமான தீயில் வைத்து கறியுடன் தூள் வகைகள் ஒன்றாக சேரும்படி நன்கு 2 நிமிடங்கள் பிரட்டவும். மிளகாய் தூள் வாசம் போனவுடன், தேங்காய், கசகசா விழுதைச் சேர்க்கவும். கறியுடன் மசாலா மற்றும் தேங்காய் விழுது ஒன்றாக சேரும்படி கிளறிவிட்டு, ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி தீயை அதிகமாக வைத்து, ஒரு முறை கிளறிவிட்டு குக்கரை மூடி வேக வைக்கவும். குக்கரிலிருந்து ப்ரசர் வந்ததும் வெயிட் போட்டு 4 விசில் வரும் வரை வைத்து அடுப்பிலிருந்து இறக்கிவிடவும். சிறிது நேரம் கழித்து குக்கரைத் திறந்து பார்த்தால் கறியில் உள்ள கொழுப்பு மற்றும் எண்ணெய் மேலே மிதந்து வந்திருக்கும். கமகமக்கும் மட்டன் குழம்பு தயார். இந்த குழம்பில் நல்லெண்ணெய் மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து செய்வதால் மிகவும் ருசியாக இருக்கும். இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் பல உள்ளன. இந்த குழம்பை பரோட்டா மற்றும் சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடலாம்.
இது வீட்டில் உள்ள மசலாக்களை சேர்த்து செய்வதால் சுவையை அதிகரிக்கும். மேலும் இதனை சமையல் தெரியாதவர்கள் கூட எளிமையாக செய்ய முடியும்.

டாபிக்ஸ்