CT 2025: இந்தியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் மாட் ஹென்றி விளையாடுகிறாரா?

11 hours ago
ARTICLE AD BOX
இந்தியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் மாட் ஹென்றி விளையாடுகிறாரா?

CT 2025: இந்தியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் மாட் ஹென்றி விளையாடுகிறாரா? கேப்டன் சொல்வது இதுதான்

எழுதியவர் Sekar Chinnappan
Mar 09, 2025
11:02 am

செய்தி முன்னோட்டம்

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி 2025 இறுதிப் போட்டியில் இந்தியா vs நியூசிலாந்து மோதல் நடைபெற உள்ளது.

இரு அணிகளும் போட்டி முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள நிலையில், பட்டத்தை வெல்லும் முனைப்புடன் உள்ளன.

இந்நிலையில், நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், அதன் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மாட் ஹென்றிக்கு ஏற்பட்ட காயம் அமைந்துவிட்டது.

அவர் 10 விக்கெட்டுகளுடன் சாம்பியன்ஸ் டிராபியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவராக உள்ளார்.

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான அரையிறுதியின் போது ஹென்றி தோள்பட்டை காயத்தால் பாதிக்கப்பட்டார்.

இறுதிப்போட்டி

இறுதிப்போட்டியில் விளையாடுவாரா?

காயம் காரணமாக மாட் ஹென்றி இறுதிப்போட்டியில் பங்கேற்பது கேள்விக்குறியான நிலையில், போட்டிக்கு முன்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் இதுகுறித்தது அப்டேட் கொடுத்துள்ளார்.

போட்டி தொடங்கும் முன்னர் நடக்கும் பயிற்சி அமர்வில் அவரது உடற்தகுதி ஆய்வு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் அவரை பங்கேற்க வைப்பதா இல்லையா என முடிவு செய்யப்படும் என மிட்செல் சாண்ட்னர் அப்போது தெரிவித்தார்.

இதற்கிடையே, இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்வது சவாலானது என சாண்ட்னர் ஒப்புக்கொண்டார்.

எனினும் முந்தைய குரூப் ஆட்டத்தில் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் இந்த முறை வெல்வோம் என நம்பிக்கை தெரிவித்தார்.

Read Entire Article