பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கு தற்காப்பு கலை அவசியம்; கல்லூரி மாணவி உலக சாதனை

6 hours ago
ARTICLE AD BOX

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்கு தற்காப்பு கலை அவசியம் என்பதை வலியுறுத்தி, கல்லூரி மாணவி கண்களை கட்டி கொண்டு பரதநாட்டியம் ஆடிய படி  தொடர்ந்து பத்து மணி நேரம்   இரு கைகளில் சிலம்பம் சுழற்றி உலக சாதனை படைத்துள்ளார்.

Advertisment

கோவை காந்திமா நகர்,வ.உ.சி.நகர் பகுதியை சேர்ந்த மகேஷ்,பகவதி தம்பதியினரின் மகள் நந்திதா. கல்லூரி மாணவியான இவர் சிறுவயது முதலே தமிழர் பாரம்பரிய தற்காப்பு கலையான சிலம்ப கலையை ஆர்வமுடன் கற்று மாவட்ட மாநில,தேசிய அளவில் பல்வேறு வெற்றிகளை குவித்துள்ளார்.

பரதநாட்டியமும் கற்றுள்ள நந்திதா பரதநாட்டியத்தையும் சிலம்ப கலையையும் இணைத்து பயிற்சி எடுத்துள்ளார்.

இந்நிலையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்கு தற்காப்பு கலை  அவசியம் என்பதை வலியுறுத்தி  சிலம்பம் மற்றும் பரதநாட்டியத்தை இணைத்து  புதிய உலக சாதனையை செய்து  மாணவி நந்திதா அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

Advertisment
Advertisements

அதன் படி அதிகாலை நான்கு மணி முதல் கண்களை கட்டி கொண்டு சிலம்பத்தை எடுத்த அவர்,பரதநாட்டியம் ஆடியபடி  இரு கைகளிலும்  தொடர்ந்து பத்து மணி நேரம் இடைவிடாது சுழற்றி  உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.

காலை 4 மணி முதல் மதியம் இரண்டு மணி வரை தொடர்ந்து நடனம் ஆடியபடி  சிலம்பம் சுழற்றி  இவர் செய்த சாதனை இந்தியா உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.

தொடர்ந்து உலக சாதனை செய்த மாணவி  நந்திதாவிற்கு மாநகராட்சி மேயர் ரங்கநாயகி சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கி கவுரவித்தார்.

அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களில் இருந்து பெண்கள் தங்களை காத்து கொள்ள தற்காப்பு கலை அவசியம் என்பதை வலியுறுத்தி கல்லூரி மாணவி நந்திதா செய்த உலக சாதனையை அவரது பெற்றோர், உறவினர்கள், பொதுமக்கள், என பலரும்  கைகளை தட்டி உற்சாகபடுத்தி பாராட்டு தெரிவித்தனர்.

செய்தி: பி.ரஹ்மான்

Read Entire Article