Champions Trophy: வெற்றி! வெற்றி! சாம்பியன்ஸ் டிராபியை வென்றது இந்தியா! நியூசிலாந்து போராடி தோல்வி!

6 hours ago
ARTICLE AD BOX

champions trophy 2025 ind vs nz: ஒரு மாத காலமாக நடந்து வந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மகுடம் சூடப்போவது யார்? என்பதைத் தீர்மானிக்கும் இறுதிப்போட்டி இன்று துபாயில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங்கை செய்தது. ரவீந்திரா அதிரடி தொடக்கம் தந்தாலும் இந்தியா சுழல் தாக்குதல் நடத்தியதால் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தது.

252 ரன்கள் டார்கெட்:

மிட்செல், ப்ராஸ்வெல் அபாரமான பேட்டிங்கால் 252 ரன்கள் இந்தியாவிற்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து, சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் களமிறங்கிய இந்திய அணிக்கு ரோகித் - சுப்மன்கில் ஜோடி அபாரமான தொடக்கம் தந்தது. ரோகித் சர்மா அதிரடியாக ஆட சுப்மன்கில் நிதானமாக ஆடினார்.

பவர்ப்ளே என்பதால் ரோகித் அடித்து ஆடினார். இதனால், இந்திய அணியின் ஸ்கோர் மளமளவென எகிறியது. ரோகித் சர்மா பவுண்டரியும், சிக்ஸரும் விளாசினார். அபாரமாக ஆடிய ரோகித் சர்மா அரைசதம் விளாச, அவருக்கு ஒத்துழைப்பு தந்து கொண்டிருந்த சுப்மன்கில் 31 ரன்கள் எடுத்திருந்தபோது கிளென் ப்லிப்ஸ் பிடித்த அபாரமான கேட்ச்சால் அவுட்டானார்.

ரோகித் 76 ரன்கள்:

அடுத்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி வந்தார். அவர் 1 ரன்னில் ப்ராஸ்வெல் பந்தில் அவுட்டாக, சிறிது நேரத்தில் அபாரமாக ஆடிக்கொண்டிருந்த ரோகித் சர்மா 76 ரன்களில் அவுட்டானார். 122 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் விழுந்ததால் இந்திய அணி தடுமாறியது.

அப்போது, அக்ஷர் படேல் - ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி சேர்ந்தது. இந்த ஜோடி மிகவும் நிதானமாக ஆடியது. பொறுப்புடன் ஆடிய இந்த ஜோடியை பிரிக்க சான்ட்னர், ப்ராஸ்வெல், ரவீந்திரா, ப்லிப்ஸ் என மாறி, மாறி சுழல் தாக்குதல் நடத்தினர். ஆனாலும், மிகவும் நிதானமாக ஆடிய அணியின் ஸ்கோரை மெல்ல மெல்ல உயர்த்தினர்.

ஸ்ரேயாஸ் ஐயர் 48 ரன்கள்:

ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 48 ரன்களில் அவுட்டானார். சிறிது நேரத்தில் அவருக்கு ஒத்துழைப்பு தந்த அக்ஷர் படேலும் அவுட்டானார். அவர் 40 பந்துகளில் 1 பவுண்டரி 1 சிக்ஸருடன் 29 ரன்கள் எடுத்து அவுட்டானார். 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில், கே.எல்.ராகுல் - பாண்ட்யா ஜோடி சேர்ந்தனர்.

மைதானம் சுழலுக்கு ஒத்துழைத்த நிலையில், இருவரும் இணைந்து மேற்கொண்டு விக்கெட்டுகள் விழுந்துவிடக்கூடாது என நிதானமாக ஆடினர். இதனால், கடைசி 6 ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு 40 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது, ஹர்திக் பாண்ட்யா ஒரு சிக்ஸர் விளாசினார். இருப்பினும், அவ்வப்போது அவர்கள் கட்டுக்கோப்பாக பந்துவீசினாலும் கே.எல்.ராகுல் - பாண்ட்யா ஜோடி ஆட்டத்தை முழுவதும் இந்தியா வசம் கொண்டு வந்தனர். இருப்பினும், வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பாண்ட்யா அவுட்டானார்.
சாம்பியன்ஸ் டிராபி:

இதனால், இந்திய அணி 13 ரன்களில் அவுட்டானார். அடுத்து கே.எல்.ராகுல் - ஜடேஜா ஜோடி சேர்ந்தது. ஜடேஜா அடுத்தடுத்து 2 ரன்களை எடுத்தார். கடைசி 12 பந்துகளில் 7 ரன்கள் தேவைப்பட்டது. இந்திய அணி 6 பந்துகள் மீதம் வைத்து இலக்கை எட்டியது. கே.எல்.ராகுல் 33 பந்துகளில் 1 பவுண்டரி 1 சிக்ஸருடன் 34 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். ஜடேஜா 5 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார். 4 விககெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை 12 ஆண்டுகளுக்கு பிறகு கைப்பற்றியது.

Read Entire Article