ARTICLE AD BOX
நாட்டின் மிகப்பெரிய மருத்துவ நிறுவனமான மேன்கைண்ட் பார்மா (Mankind Pharma)-வின் கிளை நிறுவனம் மேன் ஃபோர்ஸ் டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது.
பாலியல் குறித்து வெளிப்படையாக பேசுவதற்கு வெட்கப்படும் இந்தியாவில், சிறப்பாக ஆணுறை விற்பனை செய்துவரும் வெற்றிகரமான நிறுவனமாக கருதிக்கொள்ளும் மேன்கைண்ட் பார்மாவின் இணை நிறுவனர் ராஜீவ் ஜுனேஜா, ஆணுறைகளில் அதிகம் விற்பனையாகும் ஃப்ளேவர் குறித்துப் பேசியுள்ளார்.
தெற்கில் இருப்பவர்களுக்கு Flower Flavor Condom பிடிக்கும்!
இந்தியாவின் ஒவ்வொரு பிராந்தியத்திலும் வசிக்கும் நபர்கள், ஒவ்வொரு விதமான ஃப்ளேவரை விரும்புவதாக தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்தமாக சாக்லேட் மற்றும் ஸ்ட்ராபெர்ரி ஃப்ளேவர் ஆணுறைகள் அதிகமாக விற்பனையாவதாகவும், உலகம் முழுவதும் இருப்பதுபோல ஃப்ளேவர் இல்லாத ஆணுறைகள் மிகக் குறைவாக விற்பனையாவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஃப்ளேவர் உள்ள ஆணுறைகளில் பான் (வெற்றிலையில் இருந்து உருவாக்கப்படும்) ஃப்ளேவர் மிகக் குறைவாக விற்பனையாவதாகவும் கூறியுள்ளார்.
பான் ஃப்ளேவர் சில பகுதிகளில் மட்டும் அதிகம் விற்பனையாவதாக கூறியுள்ளார். உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட இந்திய பிரதேசங்களில் வெற்றிலை அதிகம் விற்பனையாவதாகவும், தென்னிந்திய பிரதேசங்களில் மல்லிகை ஃப்ளேவர் அதிகம் விற்பனையாவதாகவும் கூறியுள்ளார். தென்னிந்தியர்களுக்கு பூக்கள் பிடிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் நவராத்ரியின் போது குஜராத்தில் அதிகமாக ஆணுறை விற்றதாகவும் கூறியுள்ளார். நவராத்ரி பண்டிகையின்போது கர்பா நடன விழா இருப்பதால் விற்பனை அதிகரித்திருக்கிறது என்றும் கூறியுள்ளார்.
பாலியல் தொழிலாளியின் நிலத்தில் மண் எடுத்து செய்யப்படும் துர்கா சிலை..! எங்கே? ஏன்?