Coimbatore, Madurai, Trichy News Live: நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா; கடலூர் செல்கிறார் ஸ்டாலின்

3 days ago
ARTICLE AD BOX

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை திறந்து வைக்கவும், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும் கடலூருக்கு செல்கிறார். கடலூரில் உள்ள மஞ்சக்குப்பம் மைதானத்தில் இன்று மாலை 5 மணியளவில் பிரம்மாண்டமான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது.

Advertisment

திருச்சி விமான நிலையத்தில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்புவிற்கு தினமும் 2 முறை விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இலங்கை யாழ்ப்பாணம் ஜாப்னா விமான நிலையத்தில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வருகிற மார்ச் மாதம் முதல் புதிய விமான சேவையை இண்டிகோ நிறுவனம் தொடங்க உள்ளது. இதனால் வளைகுடா நாடுகளுக்கு செல்பவர்கள் மிக எளிதாக, குறைந்த கட்டணத்தில் செல்வதற்கு ஏதுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read Entire Article