AFG vs ENG: கடைசி வரை போராடிய இங்கிலாந்து… கடைசியில் திரில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான்

2 hours ago
ARTICLE AD BOX

லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. முதலில் பேட்டிங் செய்தபோது தொடக்கத்தில் தடுமாறினாலும் அடுத்ததாக அதிரடியான ஆட்டத்தை ஆப்கானிஸ்தான் அணி வெளிப்படுத்தியது என்றே சொல்லலாம்.

அணியின்  முக்கிய வீரர்களான ரஹ்மானுல்லா குர்பாஸ் 6, செடிகுல்லா அடல் 4, ரஹ்மத் ஷா 4, ஆகிய மூன்று பேருடைய விக்கெட்களையும் ஜோஃப்ரா ஆர்ச்சர் வீழ்த்தினார். இதனால் ஒரு கட்டத்தில் 8.5 ஓவர்களில் 3 விக்கெட் இழந்து 37 ரன்கள் மட்டுமே எடுத்து ஆப்கானிஸ்தான் அணி தடுமாறியது. அந்த சமயம் எதற்கு பயம் நான் இருக்கிறேன் என அணியை இப்ராஹிம் சத்ரான் தனது தோளில் சுமந்து கொண்டு அணியை நல்ல நிலைமைக்கு கொண்டு வந்தார். 50 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 325 ரன்கள் எடுத்தது.

ஆப்கானிஸ்தான் அணி 325 ரன்கள் எடுத்துள்ள நிலையில், அடுத்ததாக 326 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கிய நிலையில், தொடக்கத்தில் சற்று தடுமாறியது. குறிப்பாக, பிலிப் சால்ட் 12, பென் டக்கெட் 38, ஜேமி ஸ்மித் 9, ஆகியோர் தொடர்ச்சியாக ஆட்டமிழந்தனர்.

அடுத்ததாக களத்திற்கு வந்த ஜோ ரூட் மிகவும் நிதானமாக விளையாடி அரை சதம் விளாசினார். அவருடன் ஒரு பக்கம் நிதானமாக பார்ட்னர்ஷிப் கொடுத்து வந்த ஹாரி புரூக் ஒரு கட்டத்தில் நிதானம் இல்லாமல் 25 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பிறகு களத்திற்கு வந்த அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் ரூட்டுடன் இணைந்து அணியை வெற்றி பாதைக்கு எடுத்து கொண்டு சென்றார்.

இருப்பினும் ரன்ரேட் அதிகமான காரணத்தால் அழுத்தம் ஏற்பட்டது, தொடர்ச்சியாக பட்டரும் விக்கெட் இழந்த காரணத்தினால் இங்கிலாந்தணி மிகவும் தடுமாறியது ஜோ ரூட் சதம் அடித்து அதிரடியாக விளையாடிய போதிலும் கடினமாக  போராடியும் இங்கிலாந்து அணியால் வெற்றிபெற முடியாமல் போனது. போட்டியில் இறுதியாக 49.5 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழப்பிற்கு 317 ரன்கள் மட்டுமே எடுத்து. இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

ஆப்கானிஷ்தான் அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில் அஸ்மதுல்லாஹ் மோர்சாய்5 விக்கெட்,முகமது நபி 2 விக்கெட்களை வீழ்த்தினார். ரஷித் கான், அஸ்மத்துல்லா ஒமர்சாய் ஆகியோர் தலா 1 விக்கெட்களை வீழ்த்தினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read Entire Article