ARTICLE AD BOX
மெல்போர்ன்,
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் மேத்யூ குனேமேன் கடந்த மாதம் இலங்கையில் நடந்த டெஸ்ட் தொடரில் மொத்தம் 16 விக்கெட்டுகள் வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டார். ஆனால் அவரது பந்து வீச்சு சர்ச்சைக்குள்ளானது. அதாவது ஐ.சி.சி. விதிப்படி, ஒரு பவுலர் பந்து வீசும் போது, முழங்கை 15 டிகிரி கோணத்திற்கு மேல் வளையக்கூடாது.
இதை தாண்டினால் விதிமுறைக்கு புறம்பானது என்று அறிவிக்கப்படும். இதே பிரச்சினையில் சிக்கிய குனேமேன் , பிரிஸ்பேனில் உள்ள பரிசோதனை மையத்தில் தனது பந்து வீச்சில் சில மாற்றங்களை செய்து சோதனைக்குட்படுத்தினார். இதன் முடிவை ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது. இதில் அவரது பந்து வீச்சு தற்போது சரியாக இருப்பதாகவும், அவர் தொடர்ந்து பந்து வீசலாம் என்றும் ஐ.சி.சி கூறியுள்ளது.
Related Tags :