’72 வயதில் ஸ்டாலின் அப்பா ஆக ஆசைப்படுகிறார்’ முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!

1 day ago
ARTICLE AD BOX

அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பு 

கேள்வி:- விளையாட்டு துறையில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளதாக சொல்கிறார்களே?

விளையாட்டுத்துறை மாணவர்களுக்கு அதிமுகதான் இட ஒதுகீட்டை கொடுத்தது. அவர்கள் அரசு வேலையில் அமர அதிமுகவே காரணம். பர்மா பஜாரில் விற்கும் கப்பை வாங்கி ஸ்டாலினையும், சம்பந்தப்பட்ட அமைச்சரையும் ஒருவர் ஏமாற்றி உள்ளதே இந்த அரசின் சாதனை. விளையாட்டை ஊக்கப்படுத்த இந்த அரசு எதையும் செய்யவில்லை. இது குறித்து உதயநிதி ஸ்டாலின் உடன் விவாதிக்கத் தயார். 

கேள்வி:- வீணாய் போன பழனிசாமி என டிடிவி தினகரன் கூறி உள்ளாரே?

திரும்பத் திரும்ப சொல்கிறேன், வீணாய் போன தினகரனை பற்றி என்னிடம் கேட்காதீர்கள். நான் நாகரீகத்துடன் பேசுகிறேன். அவர் கடைபிடிக்கும் நாகரீகத்தின் அடிப்படையில்தான் நான் பதில் சொல்வேன். சேரக்கூடிய காலகட்டம் வரும் என அவர்கள் சொல்லலாம்.

கேள்வி:- கோ பேக் ஸ்டாலின் என பாஜகவினர் ட்ரண்ட் செய்கின்றனரே?

இவர்கள் கெட் அவுட் மோடி என்றும் பாஜகவினர் ஸ்டாலின் கெட் அவுட் என்றும் ட்ரண்ட் செய்கின்றனர். நாட்டில் எவ்வுளவோ பிரச்னைகள் உள்ளது. தமிழ்நாட்டில் கொலை இல்லாத நாளே இல்லை. சட்டம் ஒழுங்கு கேள்விக்குறி ஆகி உள்ளது. இதை பற்றியெல்லாம் பேசுவதே இல்லை.

கேள்வி:- அப்பா என சொல்வது பெருமிதமாக உள்ளதாக முதலமைச்சர் கூறி உள்ளாரே? 

இது வீணான வில்லங்கம். 72 வயதில் அப்பா ஆக ஆசைப்படுபவர் ஸ்டாலின்தான்.

கேள்வி:- தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளதாக முதலமைச்சர் கூறி உள்ளாரே?

கல்விக் கடனை ரத்து செய்துவிட்டீர்களா?, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வந்துவிட்டீர்களா?, டீசல் விலை குறைக்காதது ஏன்?,  கேஸ் மானியமாக 100 ரூபாய் தராதது ஏன்?, தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதான் உள்ளார்கள். 2026 தேர்தலில் திருப்பி அடிப்பார்கள். 

கேள்வி:- அன்பில் மகேஸ் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு பொற்காலமாக மாறி உள்ளது என முதலமைச்சர் கூறி உள்ளாரே?

அரசுப்பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை. பள்ளி மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்ப அறிவை கொண்டு வர ஒதுக்கீடு செய்யப்பட்ட 500 கோடி இன்னும் செலவிடப்பட்டவில்லை. உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றத் தலைவராக இருக்கத்தான் அன்பில் மகேஸ் லாயக்கு. பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருக்க லாயக்கு இல்லை. 

மும்மொழிக் கொள்கை குறித்து அண்ணாமலை பேசுகிறார். அவரே இருமொழிக் கொள்கை படித்து ஐபிஎஸ் ஆனவர்தான், இந்தியை திணிக்க வேண்டாம் என்பதே எங்கள் நிலைப்பாடு. இந்தி கற்றுக் கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தை யாரும் தடை செய்யவில்லை. ஆனால் அதை பாடத்திட்டத்தில் சேர்த்து மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி என்று மத்திய அரசு சொல்வது தமிழ்நாட்டுக்கு செய்யும் துரோகம். இருமொழிக் கொள்கைதான் தமிழ்நாட்டுக்கு வெற்றியை கொடுத்து உள்ளது. இன்றைக்கும், என்றைக்கும் இருமொழிக் கொள்கைதான். 

கேள்வி:- பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து உள்ளாரே?

தேர்தல் கூட்டணியை பொறுத்தவரை கட்சி முடிவு செய்யும். ஜனவரி மாதம்தான் தேர்தல் காலம். கூட்டணி குறித்து எந்த கருத்தும் தற்போது சொல்ல முடியாது. அதிமுக யாருடன் கூட்டணி என்பதை சரியான நேரத்தில் தெரிவிப்போம். 

இலங்கை கடற்படையால் 34 மீனவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். முதலமைச்சர் டெல்லிக்கு கடிதம் எழுதுவதோடு நிறுத்துவிடுகிறார். இதுவரை முத்தரப்பு பேச்சுவார்த்தை ஏன் நடத்தப்படவில்லை. அதிமுக ஆட்சியில் இந்த விவகாரத்திற்காக இலங்கை அரசு, மத்திய அரசு, தமிழ்நாடு இணைந்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியது.

Kathiravan V

TwittereMail
காஞ்சி கதிரவன், 2016ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் உள்ளார். இயந்திரவியல் பட்டயப்படிப்பு, இளங்கலை அரசியல் அறிவியல், முதுகலை வணிக மேலாண்மை படித்து உள்ளார். தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அரசியல், நாட்டு நடப்பு, தொழில்முனைவு, வரலாறு, ஆன்மீகம் சார்ந்த செய்திகளில் பங்களித்து வருகிறார். அபுனைவு நூல்கள் வாசிப்பும், உரைகள் கேட்டலும், உரையாடல்களும் இவரது பொழுதுபோக்கு.
Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.
Read Entire Article