ARTICLE AD BOX
Published : 24 Feb 2025 06:11 AM
Last Updated : 24 Feb 2025 06:11 AM
3 கோடி ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் ஒரு வாரத்துக்குள் டெண்டர்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

சென்னை: மின்இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்காக 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதல் செய்ய ஒரு வாரத்துக்குள் டெண்டர் விடப்பட உள்ளது.
வீடுகள் உள்ளிட்ட மின்இணைப்புகளில் மின்நுகர்வை துல்லியமாக கணக்கெடுக்கவும், மின்இழப்பை தடுக்கவும், மின்கணக்கீட்டில் நிகழும் முறைகேடுகளை தடுத்து வருவாயை அதிகரிக்கும் நோக்கில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த அனைத்து மாநில மின்வாரியங்களையும், மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.
மேலும், 2026-ம் ஆண்டுக்குள் ஸ்மார்ட் மீ்ட்டர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என காலக்கெடு நிர்ணயித்துள்ளது. அதற்குள் இத்திட்டத்தை நிறைவேற்றினால், மத்திய அரசு தரும் நிதியுதவி மானியமாக எடுத்துக் கொள்ளப்பட்டு, மீண்டும் செலுத்தத் தேவையில்லை. இல்லையெனில், அது கடனாக மாற்றப்பட்டு மீண்டும் திருப்பி செலுத்த வேண்டும்.
அதன்படி, தமிழக மின்வாரியம் ஸ்மார்ட் மீ்ட்டர்களை பொருத்த முடிவு செய்தது. இதற்காக, கடந்த 2023-ம் ஆண்டு, வெவ்வேறு மாவட்டங்களை உள்ளடக்கி, 4 தொகுப்புகளாக பிரித்து 3 கோடி ஸ்மார்ட் மீட்டர் பொருத்தி, அதை 10 ஆண்டுகளுக்கு பராமரிக்கும் ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்வதற்காக டெண்டர் விடுக்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் இந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, 8 மாவட்டங்களில் மட்டும் 82 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதல் செய்ய டெண்டர் விடப்பட்டது.
இதில், அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் நிறுவனம் பங்கேற்று குறைந்த விலையை குறிப்பிட்டது. எனினும், மின்வாரியம் நிர்ணயித்த தொகையை விட இது அதிகமாக இருந்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, 3 கோடி ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கான டெண்டர் விரைவில் விடப்படும் என மின்வாரியம் அறிவித்தது.
இந்நிலையில், அண்மையில் தமிழ்நாடு மின்வாரியத்தின் 128-வது வாரிய கூட்டத்தில் ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதல் செய்வதற்காக புதிய டெண்டர்விட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஒரு வாரத்துக்குள் ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் விடும் பணி தொடங்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை
தவறவிடாதீர்!
- கார் விபத்தில் மீண்டும் சிக்கிய அஜித்
- மூத்த குடிமக்கள் ஆண்டுக்கு ஒரு முறை கட்டாயம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்: முதியோர் நல மருத்துவர் வி.எஸ்.நடராஜன் அறிவுறுத்தல்
- இலங்கை கடற்படையினரால் 32 பேர் கைது: தமிழக மீனவர்களை மீட்க வலியுறுத்தி வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
- ஆம் ஆத்மி சார்பில் டெல்லி பேரவை எதிர்க்கட்சி தலைவரானார் ஆதிஷி