ARTICLE AD BOX
25 ஆண்டுகளில் 955 மடங்கு ஆதாயம்.. ரூ.4.40லிருந்து ரூ.4,200ஆக உயர்ந்த கார்வேர் ஹை டெக் பிலிம்ஸ்..
இந்திய பங்குச் சந்தை பல மல்டிபேக்கர் பங்குகளை உருவாக்கியுள்ளது. இந்த மல்டிபேக்கர் பங்குகள் அனைத்தும் ஒரே நாளில் உருவாகிவிடவில்லை. பல ஆண்டு கால படிப்படியான ஏற்றத்துக்கு பின்தான் பெரும்பாலான மல்டிபேக்கர் பங்குகள் முதலீட்டாளர்களின் செல்வத்தை பெருக்கியுள்ளன. அந்த வகையில், முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் வருமானத்தை கொடுத்த ஒரு நிறுவன பங்குதான் கார்வேர் ஹை டெக் பிலிம்ஸ். இந்நிறுவனம் நாட்டின் முன்னணி பாலிஸ்டர் பிலிம் தயாரிப்பு நிறுவனமாகும்.
மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இந்நிறுவன பங்கின் விலை ரூ.4,200 என்ற அளவில் இருந்தது. ஆனால் 25 ஆண்டுகளுக்கு முன் இந்நிறுவன பங்கின் விலையை கேட்டால் மிகவும் வியப்புதான் ஏற்படும். நமக்கு தெரிந்தது இருந்தால் வாங்கி இருக்கலாமே என்ற எண்ணம் நம்மை அறியாமல் ஏற்படும். 25 ஆண்டுகளுக்கு முன் அந்நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை வெறும் ரூ.4.40. கடந்த 25 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கின் விலை 95,400 சதவீதம் அல்லது 955 மடங்கு அதிகரித்துள்ளது. ஒருவர் 25 ஆண்டுகளுக்கு முன் இந்நிறுவன பங்கில் ரூ.1 லட்சம் முதலீடு செய்து இருந்தால் அது இன்று ரூ.9.55 கோடியாக பெருகியிருக்கும்.

கடந்த 3 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கின் விலை 904.42 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஓராண்டில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு 96.32 சதவீதம் ஆதாயம் கொடுத்துள்ளது. கடந்த 6 மாதத்தில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு 261.17 சதவீதம் மல்டிபேக்கர் ஆதாயத்தை கொடுத்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் கார்வேர் ஹை டெக் பிலிம்ஸ் பங்கின் விலை ரூ.4,195.75ஆக இருந்தது. 2024 மே 9ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இந்நிறுவன பங்கின் விலை 52 வார குறைந்தபட்சமான ரூ.1,513.25க்கு சென்றது.
ஆனால் அதன் பிறகு இந்நிறுவன பங்கின் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டது. கடந்த டிசம்பர் 20ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் இந்நிறுவன பங்கின் விலை புதிய 52 வார உச்சமான ரூ.5,373ஐ எட்டியது குறிப்பிடத்தக்கது. கார்வேர் ஹை டெக் பிலிம்ஸ் நிறுவனம் கடந்த டிசம்பர் காலாண்டில் வருவாயாக ரூ.441.83 கோடியாக ஈட்டியுள்ளது. மேலும் அந்த காலாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.65.53 கோடி ஈட்டியுள்ளது.
story written: subramanian