ARTICLE AD BOX
அமீர் கான்
பாலிவுட் திரையுலகில் சூப்பர்ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் அமீர் கான். இவர் நடிப்பில் கஜினி, லகான், தங்கல், பி.கே என பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
மேலும் தற்போது ரஜினியின் கூலி திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடிக்கிறார் என தகவல் வெளியானது.
அமீர் கான் ஓபன்
இந்நிலையில், 20 ஆண்டுகளாக தான் நடிக்கும் படங்களுக்கு சம்பளம் பெறவில்லை என்று அமீர் கான் கூறிய விஷயம் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், " 20 வருடங்களாக நான் நடித்த எந்த படத்திற்கும் சம்பளம் வாங்கவில்லை. ஆனால், நான் நடித்த படங்கள் திரைக்கு வந்து லாபம் ஈட்டிய பின் அந்த லாபத்தில் இருந்து பங்கு பெற்றுக்கொள்வேன். அதற்கு முன் ஒரு ரூபாய் கூட பெற்று கொள்ள மாட்டேன். சம்பள முன்பணமும் பெறுவது இல்லை" என்று தெரிவித்துள்ளார்.