ARTICLE AD BOX
மக்களின் முக்கிய உணவு பட்டியலில், அரிசி சாதம் முக்கியமானது. இன்றைய காலக்கட்டத்தில் பல அரிசி வைகைகள் வந்துவிட்டாலும், தற்போது ஆரோக்கியமான நமது பாரம்பரிய அரிசி வகைகளை தேடி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பாரம்பரிய அரிசி வகைகளில் முக்கியமானது மாப்பிள்ளை சம்பா. இந்த அரிசியில் சுவையான இட்லி மற்றும் கார சட்னி எப்படி செய்வது என்பதை பார்ப்போமா?
தேவையான பொருட்கள்
மாப்பிள்ளை சம்பா அரிசி – ஒரு கப்
உளுத்தம் பருப்பு – அரை கப்
வெந்தயம் – அரை டீஸ்பூன்
சட்னி அரைக்க
சமையல் எண்ணெய் 2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு 3 டீஸ்பூன்
உளுந்து - டீஸ்பூன்
சின்ன வெங்காயம் – ஒரு கப்
பூண்டு – ஒரு கப்
காய்ந்த மிளகாய் – 6-7
இஞ்சி – 4 சிறிய துண்டு
புளி – 2 சிறிய உருண்டை
உப்பு தேவையான அளவு
செய்முறை:
மற்ற அரிசியை போல் மாப்பிள்ளை சம்பா இருக்காது. உடலுக்கு தேவையான பல சத்துக்கள் அடங்கியுள்ளது. குறிப்பாக கிட்னிக்கு மாப்பிள்ளை சம்பா முக்கிய நன்மையை கொடுக்கிறது. இதனால் இந்த அரிசி அரைப்பதற்கு முன்பாக 12 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். வழக்கமான உளுந்து 2 மணி நேரம் ஊறினால் போதுமானது.
12 மணி நேரம் ஊறிய பின்அரிசியை எடுத்து அரைத்துக்கொள்ளவும். அதேபோல் உளுந்தையும், வெந்தையத்தையும் சேர்த்து அரைத்து, அரிசி மாவுடன் கலந்து 8 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும். இந்த மாவை இட்லி தட்டி வேக வைத்து எடுத்தால் சுவையான மாப்பிள்ளை சம்பா இட்லி தயார்.
கார சட்னிக்கு, பானில், எண்ணெய் ஊற்றி, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வெங்காயம்,பூண்டு, காய்ந்த மிளகாய், இஞ்சி ஆகியவற்றை சேர்த்து நன்றாக வறுக்கவும். இந்த கலவையை புளி சேர்த்து தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் அறைத்து எடுத்தால் சுவையான கார சட்னி ரெடி. மாப்பிள்ளை சம்பா இட்லியுடன் இந்த கார சட்னியை வைத்து சாப்பிட்டு ட்ரை பண்ணுங்க.