வாழ்த்துங்களேன்!

2 hours ago
ARTICLE AD BOX

பிறந்த நாள், திருமண நாள், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம்... இவை போன்று இன்னும் பல்வேறு இனிய வைபவங்களைக் காணும் வாசகர்களுக்குச் சக்தி விகடனின் வாழ்த்துகள்!

அன்பார்ந்த வாசகர்களே!

உங்கள் சக்தி விகடன் 21-ம் ஆண்டில் வெற்றிநடை போடும் இந்த இனிய தருணத்தில், உங்களுக்குப் பிடித்தமான வாழ்த்துங்களேன் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் பிரார்த்தனைகள், பிரசித்திபெற்ற பரிகாரத் தலங்களில் சமர்பிக்கப்படவுள்ளன.

பிறந்தநாள், திருமண நாள், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் முதலான இனிய தருணங்களை முன்னிட்டு, உங்களுக்காக அல்லது உங்களின் உற்றார்-உறவினர் மற்றும் நண்பர்களுக்கான பிரார்த்தனைகளை, உங்களின் மொபைல் போன் மூலம் பதிவு செய்யுங்கள். அதற்கு, இந்தப் பக்கத்தில் உள்ள QR Code-ஐ ஸ்கேன் செய்து, அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பூர்த்தி செய்தால் போதும்.

அவ்வாறு பதிவு செய்யப்படும் விவரப்படி, இனிய தருணங்களைக் கொண்டாடும் அன்பர்களுக்கான பிரார்த்தனைகள், அவர்களின் வாழ்வில் சகல வளங்களும் பொங்கிப் பெருகிடும் வகையில், தமிழகத்தின் வழிபாட்டுச் சிறப்பு மிக்க ஆலயங் களில் சமர்ப்பிக்கப்படும்.

18.2.25 முதல் 3.3.25 வரை பிரார்த்தனைக்குப் பதிவு செய்ய வேண்டிய கடைசித் தேதி: 10.2.25

மேலப்பெரும்பள்ளம் ஸ்ரீவலம்புரநாதர்

மேலப்பெரும்பள்ளம் ஸ்ரீவலம்புரநாதர் ஆலயத்தில்..!

18.2.25 முதல் 3.3.25 வரையிலும் சுப நிகழ்வுகள், இனிய தருணங்களைக் கொண்டாடும் அன்பர்களுக்கான சிறப்புப் பிரார்த்த னைகள், மயிலாடுதுறை மேலப்பெரும்பள்ளம் எனும் திருவலம்புரம் ஸ்ரீவடுவகிர்கண்ணி அம்மை சமேத ஸ்ரீவலம்புரநாதர்ஆலயத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றன.

திருமால் தவம் செய்து பதுமமும்; சங்கமும் பெற்ற தலம் இது. நந்தியும் காமதேனுவும் ஒருசேர வலம்புரி மலர்களைக் கொண்டு பூஜித்த தலம். ஏரண்ட மகரிஷிக்கு இறைவன் அருளிய தலம். ஸ்த்ரீ சாபநிவர்த்தி தலம். பட்டினத்தார் கஞ்சி ஏற்று பசி போக்கிக் கொண்ட தலம். பரணி நட்சத்திரத்தவர்கள் தரிசிக்க வேண்டிய தலம். இங்கு சென்று வழிபட்டால் நீண்ட ஆயுள், நீங்காத செல்வம், நிலைத்த ஆரோக்கியம் என அனைத்தும் கைகூடும்.

அற்புதமான இந்தத் தலத்தில்தான்... வாசகர்கள் சகல சௌபாக்கியங்களைப் பெற்று வாழவும், அவர்களின் வேண்டுதல்கள் யாவும் நிறைவேறவும் வேண்டி வாழ்த்துப் பிரார்த்தனைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன!

Read Entire Article