பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் பலி

4 hours ago
ARTICLE AD BOX

லாகூர்,

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் கடந்த சில நாட்களுக்குமுன் பாதுகாப்புப்படையினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பாதுகாப்புப்படையினர் 18 பேர் உயிரிழந்தனர்.

இதையடுத்து, நாடு முழுவதும் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையை பாதுகாப்புப்படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், அந்நாட்டின் கைபர் பக்துவா மாகாணம் டிரா இஸ்மாயில் கான் மாவட்டம் குலசி பகுதியில் பாதுகாப்புப்படையினர் நேற்று அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, நடந்த மோதலில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் சிலர் ஆப்கானிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகளும் அடக்கம் என தகவல் வெளியாகியுள்ளது.


Read Entire Article