ARTICLE AD BOX
ஆளுக்கு 1 ஆர்டர்.. 40% டிஸ்கவுண்ட்.. கிட்டத்தட்ட பாதி விலை.. 8GB ரேம், 5000mAh பேட்டரி, 50MP செல்பீ!
நோக்கியா (NOKIA) பிராண்டட் மொபைல் போன்களை தயாரிக்கும் உரிமத்தை தன்வசம் கொண்டு உள்ள எச்எம்டி க்ளோபல் (HMD Global) நிறுவனம் ஆனது எம்டபிள்யூசி 2025 (MWC 2025) நிகழ்வில் பல புதிய பீச்சர் மொபைல் போன்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது.
அதில் எச்எம்டி பியூஷன் எக்ஸ்1 (HMD Fusion X1) மற்றும் எச்எம்டி பார்கா ஃப்யூஷன் (HMD Barca Fusion) ஸ்மார்ட்போன்களும் அடங்கும் 2 ஸ்மார்ட்போன்களையும் அறிமுகம் செய்துள்ளது. இவ்விரு மாடல்களின் விலை மற்றும் இந்திய அறிமுகம் குறித்த விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதற்கிடையில் பழைய எச்எம்டி 5ஜி ஸ்மார்ட்போனின் விலை "கிட்டத்தட்ட" பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.

அது எச்எம்டி கிரெஸ்ட் மேக்ஸ் 5ஜி (HMD Crest Max 5G) ஸ்மார்ட்போனாகும். பிரபல இ-காமர்ஸ் ஆன வலைத்தளம் ஆன பிளிப்கார்ட்டில், தற்போது இந்த ஸ்மார்ட்போன் 40% நேரடி தள்ளுபடியை பெற்று, அதன் அசல் எம்ஆர்பி விலையான ரூ.22,499 க்கு பதிலாக ரூ.13,290 க்கு வாங்க கிடைக்கிறது. இது 8ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷனின் விலையாகும்.
எச்எம்டி கிரெஸ்ட் மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.67-இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளே (OLED Display)
- யுனிசாக் டி760 5ஜி சிப்செட் (Unisoc T760 5G chipset)
- 5,000mAh பேட்டரி
- ஈஸி செல்ஃப் ரிப்பேர் அம்சங்கள் (Easy self-repair features)
- 50 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 64எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா யூனிட்டை பேக் செய்கிறது.
எச்எம்டி கிரெஸ்ட் மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: இது ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் உடன் வருகின்றன. இது 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் ஆக்டா-கோர் 6என்எம் யுனிசாக் டி760 5ஜி சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. எச்எம்டி க்ரெஸ்ட் மேக்ஸ் மாடல் ஆனது 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜை கொண்டுள்ளது.
மேலும் எச்எம்டி க்ரெஸ்ட் மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 8ஜிபி விர்ச்சுவல் ரேம்-ஐ வழங்குகிறது. கேமராக்களை பொறுத்தவரை, எச்எம்டி க்ரெஸ்ட் மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் 64 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா, 5 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் உள்ளன.
முன்பக்க கேமராவை பொறுத்தவரை 50 மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டுள்ளது. பேட்டரியை பொறுத்தவரை 33W சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரி பேக் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி யூனிட்கள் 800 சார்ஜிங் சுழற்சிகளை ஆதரிப்பதாக கூறப்படுகிறது. மேலும் இது ரிப்பேரபிலிட்டி 1.0 அம்சத்தை வழங்குகிறது, இது பயனர்களை - பேக் பேனல், பேட்டரி, சார்ஜிங் போர்ட் மற்றும் டிஸ்பிளே ஆகியவற்றை விரைவாக மாற்ற உதவுகிறது.
எச்எம்டி ஃப்யூஷன் எக்ஸ்1 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் (HMD Fusion X1 Features): சிப்செட்டை பொறுத்தவரை இது ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட்டை (Snapdragon 4 Gen 2 chipset) பேக் செய்கிறது. இது 8ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை ஸ்டோரேஜ் உடன் வருகிறது. டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.56 இன்ச் எச்டி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை இது 108 மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவை (108MP Primary Camera) கொண்டுள்ளது . இதனுடன் குறிப்பிடப்படாத 2 மெகாபிக்சல் சென்சாரும் உள்ளது. முன்பக்கத்தில் 50 மெகாபிக்சல் செல்பீ கேமரா (50MP Selfie Camera) உள்ளது. பேட்டரியை பொறுத்தவரை இது 33W பாஸ்ட் சார்ஜ் ஆதரவு உடனான 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது.