ARTICLE AD BOX
இன்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக சாம்பியன்ஸ் டிராபி செமி பைனலில் ஹெட் தந்த கேட்சை பிடித்த கில்லுக்கு கள நடுவர் எச்சரிக்கை கொடுத்தது குறித்து மேத்யூ ஹைடன் ஆட்சேபம் தெரிவித்திருக்கிறார்.
தற்போது இரு அணிகளுக்கும் இடையே ஆன செமி பைனல் போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த போட்டியில் வழக்கம்போல் டிராவிஸ் ஹெட் விக்கெட் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானதாக மாறி இருந்தது. இதன் காரணமாக அதிகபட்ச எதிர்பார்ப்புகள் நிலவியது.
வாய்ப்பைத் தவறவிட்ட ஷமி
இந்தப் போட்டியில் முதல் ஓவரை ஷமி வீசினார். அப்போது ஹெட்டுக்கு லீடிங் எட்ஜ் எடுத்து வந்ததை ஷமி தவறவிட்டார். இதைத் தொடர்ந்து எதிர்பார்த்தது போலவே ஹெட் அதிரடியில் ஈடுபட ஆரம்பித்தார். ஆஸ்திரேலியா அணியின் ஸ்கோர் மேலே சென்று கொண்டிருந்தது. வழக்கம்போல் இந்திய ரசிகர்களுக்கு பயம் தொற்றிக் கொண்டது.
இப்படியான நிலையில் வரும் சக்கரவர்த்தியை சீக்கிரத்தில் கொண்டு வர வேண்டுமென்று கிரிக்கெட் வர்ணனையில் இருந்தவர்கள் கூறிக் கொண்டிருந்தார்கள். ஆனால் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா வருண் சக்கரவர்த்தியை பந்துவீச்சிக்கு கொண்டு வருவதை தாமதப்படுத்திக் கொண்டே இருந்தார். இதனால் ஆஸ்திரேலியாவின் ரன் ரேட் ஒரு ஓவருக்கு 6க்கு மேல் தாண்டியது.
கில்லுக்கு நடுவர் தந்த எச்சரிக்கை
இந்த நிலையில் அதிரடியாக விளையாடிய ஹெட் 33 பந்தில் 39 ரன்கள் எடுத்து வரும் சக்கரவர்த்தியின் முதல் பந்திலையே கில்லிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார். இது இந்திய அணிக்கு இந்த போட்டியில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. ஆனால் அதற்குப் பிறகு கில்லை அழைத்த கள நடுவர் இல்லிங்வர்த் பந்தை கேட்ச் பிடித்த பிறகு சீக்கிரத்தில் வீசியதாக எச்சரிக்கை செய்தார்.
இதையும் படிங்க : 117 பந்துகள்.. இதுவரை எந்த ஸ்பின்னரும் டிராவிஸ் ஹெட் எதிராக செய்யாத விஷயம்.. வருண் சக்கரவர்த்தி அசத்தல்
இந்த நிலையில் கிரிக்கெட் கமெண்ட்ரியில் இருந்த ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். கில் பந்தை பிடித்த பிறகு அவருடைய கையில் முழுமையாக மூன்று நொடிகள் பந்து இருந்தது என்றும், எனவே அவர் பந்தை பிடித்து வீசி எறிந்ததில் எந்த விதி மீறலும் இல்லை என்றும், இதற்கு கள நடுவர் எச்சரிக்கை தந்தது தவறு என்றும் அவர் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
The post ஹெட் கேச்சை பிடித்த கில்.. எச்சரித்த கள நடுவர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் ஹைடன் – நடந்தது என்ன? appeared first on SwagsportsTamil.