ஹிட்மேன்னா சும்மாவா.. ஐ.சி.சி தொடரில் இமாலய சாதனையை நிகழ்த்திய ரோஹித் – விவரம் இதோ

3 hours ago
ARTICLE AD BOX

நடப்பு 2023-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்கான அரையிறுதி போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்பதால் இந்த போட்டி இரு அணிகளுக்குமே மிக முக்கியமான போட்டியாக மாறியுள்ளது.

ஐ.சி.சி தொடர்களில் ரோஹித் சர்மா நிகழ்த்திய இமாலய சாதனை :

இந்நிலையில் இந்த போட்டியின் போது டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 264 ரன்கள் குவித்தது. பின்னர் 265 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது இந்திய அணியானது விளையாடி வருகிறது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது துவக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா 29 பந்துகளை சந்தித்து மூன்று பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 28 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இப்படி ரோகித் சர்மா அதிரடியான துவக்கத்தை அளித்து 28 ரன்களில் ஆட்டமிழந்தாலும் ஐ.சி.சி தொடரில் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார்.

அது குறித்த விவரம் தற்போது வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் இன்றைய போட்டியில் ஒரு சிக்சர் அடித்ததன் மூலம் ரோகித் சர்மா ஐசிசி தொடர்களில் அதிக சிக்ஸர்களை விளாசிய சர்வதேச வீரர் என்ற சாதனையினை நிகழ்த்தி உள்ளார். ஐசிசி நடத்தும் சர்வதேச போட்டிகளில் மட்டும் மொத்தம் 65 சிக்ஸர்களை அவர் இதுவரை விளாசியுள்ளார்.

அவருக்கு அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரரான கிரிஸ் கெயில் 64 சிக்ஸர்களுடன் இரண்டாவது இடத்திலும், மேக்ஸ்வெல் 49 சிக்ஸர்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு அடுத்து டேவிட் மில்லர் 44 சிக்ஸர்களுடன் நான்காவது இடத்திலும், முன்னாள் இந்திய வீரரான கங்குலி மற்றும் ஆஸ்திரேலிய முன்னாள் வீரரான டேவிட் வார்னர் ஆகியோர் 44 சிக்ஸருடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.

இதையும் படிங்க : சாம்பியன்ஸ் டிராபி தோல்வி எதிரொலி.. பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் – ஆகியோருக்கு ஏற்பட்ட மோசமான நிலைமை

ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்சர்களை விளாசிய ரோகித் சர்மா தற்போது ஐசிசி தொடர்களிலும் அதிக சிக்சர்களை அடித்த வீரராக தனது பெயரை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய ரசிகர்கள் மத்தியில் “ஹிட்மேன்” என்று செல்லமாக அழைக்கப்படும் ரோஹித் சர்மா நிகழ்த்திய இந்த இமாலய சாதனை அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

The post ஹிட்மேன்னா சும்மாவா.. ஐ.சி.சி தொடரில் இமாலய சாதனையை நிகழ்த்திய ரோஹித் – விவரம் இதோ appeared first on Cric Tamil.

Read Entire Article