ARTICLE AD BOX
“அவர்களுக்கு நல்ல புத்தியை இறைவன் கொடுக்கட்டும்” என ஹெச்.ராஜா, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை குறிப்பிட்டு காங்கிரஸ் சார்பில் நாகூர் தர்காவில் பிரார்த்தனை நடத்தினர்.
திருப்பரன்குன்றம் மலை குறித்த விவகாரத்தில் இந்துத்துவா, பாஜக மக்களை தூண்டிவிடுவதாக எதிர்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இதுகூறித்து ஹெச்.ராஜா, அண்ணாமலை மீது கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். திருப்பரன்குன்றம் மலையை வைத்து அரசியல் செய்வதாக அவர்கள் மீது குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் அவர்களுகு நல்ல புத்தியைக் கொடுக்கேண்டும் என நாகூர் தர்காவில் பிரார்த்தனை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்தார்த்தனையின்போது, ”தமிழ்நாட்டிலே மதக் கலவரத்தை தூண்டக்கூடிய ஹெச்.ராஜா அவர்களுக்கும், அண்ணாமலை அவர்களுக்கும் நல்ல புத்தியை கொடுக்க வேண்டும் என்று இந்த நாகூர் பாதுஷா நாயகத்தினுடைய இந்த சன்னிதானத்தின் இறைவனிடத்திலே நாங்கள் இரு கரம் ஏந்தி பிரார்த்தனை செய்கிறோம். அவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறோம். அவர்களுக்கு நல்ல புத்தியை இறைவன் கொடுக்க வேண்டும் என்று இந்த நல்ல சன்னிதானத்திலே நாங்கள் மனமாற பிரார்த்தனை செய்கிறோம். இறைவன் தக்க தண்டனையும் கொடுக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால், அவர்களுக்கு நல்ல புத்தியை கொடுக்க வேண்டும் என்று இந்த நாகூர் ஆண்டவர் இறைவனுடைய நேசரான ஷாகுல் ஹமீது பாதுஷா நாயகத்தினுடைய இந்த சன்னிதானத்தில் நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்” என வேண்டிக்கொண்டனர்.