சுவையான பைனாப்பிள் ரசம் மற்றும் பீட்ரூட் சாலட்: வீட்டிலேயே சுலபமாக செய்யலாம்!

3 hours ago
ARTICLE AD BOX

ன்றைக்கு சுவையான பைனாப்பிள் ரசம் மற்றும் பீட்ரூட் சாலட் ரெசிபியை சிம்பிளாக வீட்டிலே எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.

பைனாப்பிள் ரசம் செய்ய தேவையான பொருட்கள்.

பைனாப்பிள்-2 கப்.

சீரகம்-1 தேக்கரண்டி.

மல்லி-1 தேக்கரண்டி.

வரமிளகாய்-2

துவரம் பருப்பு-1 தேக்கரண்டி.

மிளகு-1 தேக்கரண்டி.

மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி.

தக்காளி-1

புளி-நெல்லிக்காய் அளவு.

உப்பு-தேவையான அளவு.

கொத்தமல்லி-சிறிதளவு.

பைனாப்பிள் ரசம் செய்முறை விளக்கம்.

முதலில் பைனாப்பிளை சின்ன சின்ன துண்டுகளாக 2 கப் அளவிற்கு நறுக்கி வைத்துக்கொள்ளவும். இப்போது கடாயில் சீரகம் 1 தேக்கரண்டி, துவரம் பருப்பு 1 தேக்கரண்டி, மிளகு 1 தேக்கரண்டி, மல்லி 1 தேக்கரண்டி, வரமிளகாய் 2 சேர்த்து நன்றாக வறுத்து அரைத்து வைத்துக்கொள்ளவும்.

இதையும் படியுங்கள்:
ஆரோக்கியமும் சுவையும் நிறைந்த அல்ஸி லட்டு சுலபமா வீட்டிலேயே செய்யலாமே!
Pineapple rasam and beetroot salad

இப்போது கடாயில் நெல்லிக்காய் அளவு கரைத்து வைத்த புளி தண்ணீரை சேர்த்துவிட்டு நறுக்கிய தக்காளி 1, மஞ்சள் தூள் ¼ தேக்கரண்டி, அரைத்து வைத்த பொடி ஆகியவற்றை சேர்த்துவிட்டு நன்றாக கலந்துவிட்டுக் கொள்ளவும். நறுக்கிய பைனாப்பிளை இத்துடன் சேர்த்துவிட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவிடவும். கடைசியாக, கொத்தமல்லி சிறிதளவு தூவி இறக்கவும். அவ்வளவு தான் சுவையான பைனாப்பிள் ரசம் தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

பீட்ரூட் சாலட் செய்ய தேவையான பொருட்கள்.

பீட்ரூட்-1

தயிர்-1 கப்.

சாட் மசாலா-1/2 தேக்கரண்டி.

மிளகுத்தூள்-சிறிதளவு.

உப்பு-தேவையான அளவு.

கொத்தமல்லி-சிறிதளவு.

தாளிக்க,

எண்ணெய்-2 தேக்கரண்டி.

கடுகு-1 தேக்கரண்டி.

சீரகம்-1 தேக்கரண்டி.

கருவேப்பிலை-சிறிதளவு.

பெருங்காயத்தூள்-சிறிதளவு.

இதையும் படியுங்கள்:
கொத்து தோசை மற்றும் பூண்டு சட்னி ரெசிபி: வீட்டிலேயே சுவையாக தயார் செய்யலாம்!
Pineapple rasam and beetroot salad

பீட்ரூட் சாலட் செய்முறை;

முதலில் பீட்ரூட் ஒன்றை எடுத்து தோல் நீக்கிவிட்டு நன்றாக துருவி எடுத்துக்கொள்ளவும். இப்போது ஒரு பவுலில் துருவிய பீட்ரூட்டை சேர்த்து அத்துடன் 1 கப் தயிரை சேர்க்க வேண்டும். இப்போது இதில் மிளகுத்தூள் சிறிதளவு, சாட் மசாலா ½ தேக்கரண்டி, தேவையான அளவு உப்பு சேர்த்துவிட்டு கடைசியாக கொத்தமல்லி சிறிதளவு சேர்த்து நன்றாக கிளறவும்.

இப்போது தாளிக்க எண்ணெய் 2 தேக்கரண்டி ஊற்றி அதில் கடுகு 1 தேக்கரண்டி, சீரகம் 1 தேக்கரண்டி, பெருங்காயத்தூள் சிறிதளவு, கருவேப்பிலை சிறிதளவு சேர்த்து நன்றாக பொரிந்ததும் இதை சாலட்டில் சேர்த்து கலந்துவிட்டு பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான பீட்ரூட் சாலட் தயார்.

நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

Read Entire Article