ARTICLE AD BOX
இஸ்ரேல் நாட்டை சேர்ந்த உலகப் புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியரான இவள் நோவா ஹராரியிடம். எதிர்கால தலைமுறையினருக்கு உங்கள் அறிவுரை என்ன என்கிற கேள்வி கேட்கப்பட்டது….
அப்போது அவர் 21 ஆம் நூற்றாண்டின் மிகவும் அத்தியாவசியமான திறன் உணர்வு சார் நுண்ணறிவு. அதாவது எமோஷனல் இண்டிஜெலியன்ஸ் ஏனெனில் இந்த நூற்றாண்டில் பணி சூழல் பணியின் தன்மை வேகமாக மாற்றங்கள் ஏற்படுத்தும் இந்த மாற்றங்களை சமாளிப்பதற்கும் தொடர் கற்றல் மூலம் தங்களை தகுதிப்படுத்திக் கொள்வதற்கும் உளவியல் ரீதியான மேல் தன்மை அவசியம் என்று பதிலளித்தார்..
போட்டித் தெருவில் உணர்வுசார் நுண்ணறிவு : ஒரு நெருக்கடியை மனரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் சமாளித்து நெருக்கடிக்கு முந்தைய நிலைக்கு விரைவாக திரும்பும் திறன் தான் உளவியல் ரீதியான மேல் தன்மை என்கிறோம். ஐஏஎஸ் ஐபிஎஸ் ஐ எஃப் எஸ் போன்ற குடிமைப் பணிகளுக்கான தேர்வு நடத்தும் மத்திய பணியாளர் தேர்வாணையம் 2013 ஆம் ஆண்டு முதல் பொதுத் அறிவித்தால் நான்கு என்கிற தாளையும் முதன்மை தேர்வில் சேர்த்தது. இந்த தாளுக்குரிய பாடப்பகுதியில் உணர்வு சார் நுண்ணறிவு தலைப்பு ஒரு பகுதியாக உள்ளது..
ராணுவத்தில் பணியாற்ற அதிகாரிகளை தேர்வு செய்யும் ஒருங்கிணைந்த பாதுகாப்பு பணிகளுக்கான தேர்வில் cds தலைமை பண்பு குழு செயல்பாடு சிக்கலான சூழ்நிலைகளில் முடிவெடுக்கும் திறன் ஆகியவை சோதிக்கப்படுகின்றன. ரயில்வே துறையில் துணை நிலைய அதிகாரி உதவியாளர் ஓட்டுனர் போன்ற பணிகளுக்கான தேர்வில் உளவியல் தொடர்பான தேர்வு இடம்பெறும். அதேபோல் இந்திய விமானப்படை நடத்தும் ஏர் மேன் பதவிக்கான தேர்விலும் கூட இந்த நோக்கத்தை பயன்படுத்துகின்றனர். இப்போதெல்லாம் பள்ளிகள் கல்லூரிகள் பணியிடங்களில் உணர்வு சார் நுண்ணறிவு குறித்து அதிகம் பேசப்படுகிறது பணியிடத்தில் இது ஒரு மதிப்பு மிக்க முக்கியமான திறனாக பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மக்களாலும் பார்க்கப்படுகிறது உணர்வு சார் நுண்ணறிவு என்றால் என்ன இதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் என்பதை பலரும் தெரிந்து கொள்ள முன்வர வேண்டும்..
உணர்வு சார் நுண்ணறிவு என்பதை தனிநபர் ஒருவர் தன்னுடைய உணர்வுகளை உணரவும் பகிர்ந்து கொள்ளவும் சமயோசிதமாக வெளிப்படுத்தவும் அல்லது கட்டுப்படுத்தவும் மட்டுமின்றி பிறரின் உணர்வையும் அறிந்து சரியான முறையில் செயல்பட உதவும் உளவியல் திறன்களின் தொகுப்பு எனலாம்…!!