ARTICLE AD BOX
டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி கோப்பையை வென்றது. கடந்த ஆண்டு டி20 உலகக்கோப்பையை வெல்வதற்கு முன்னதாக 2007-ஆம் ஆண்டு தோனி தலைமையில் இந்தியா கோப்பயை வென்றிருந்தது.
அடுத்ததாக, 2007 முதல் 2024 வரை, இந்திய அணி பலமுறை முயற்சி செய்தும் கோப்பையை வெல்லமுடியவில்லை. எனவே, உலகக்கோப்பை வெல்வது என்பது இந்திய அணிக்கு ஒரு கனவாக இருந்தது. அந்த கனவு எப்போது நிறைவேறும் என இந்திய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், கடந்த ஆண்டு ரோஹித் சர்மா தலைமையில் களமிறங்கிய இந்திய அணி அசத்தலாக விளையாடி கோப்பையை வென்றது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்தியா சுலபமாக வெற்றிபெறவில்லை. மிகவும் சவாலாக தான் வெற்றிபெற்றது. ஏனென்றால், கடைசி ஓவரில் 16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்கா போராடி கொண்டு இருந்தது. ஹர்திக் பாண்டிய வீசிய முதல் பந்தில் டேவிட் மில்லர் சிக்ஸர் அடிக்க முயன்றார். ஆனால், சூர்யகுமார் யாதவ் அதை தடுத்து அற்புதமான பவுண்டரி கேட்ச் பிடித்து அசத்தினார். ஐந்தாவது பந்தில் காகிசோ ரபாடா வெளியேறினார்.
இறுதியாக, 1 பந்தில் 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், தென்னாப்பிரிக்கா ஒரு ரன் மட்டுமே எடுத்தது. இதன் காரணமாக 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று கோப்பையை தட்டிதூக்கியது. இது சாதாரண வெற்றியாக இல்லாமல் இந்தியாவே எமோஷனில் கொண்டு சென்ற ஒரு நிகழ்வாகவும் மாறியது. எனவே, இந்த தருணம் மிகவும் பெரியது என்பதால் வீரர்கள் இதை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும் என்பதற்காக பிசிசிஐ உலகக்கோப்பை போட்டியில் விளையாடிய வீரர்களுக்கு அசத்தலான பரிசை கொடுத்துள்ளது.
என்ன பரிசு?
என்ன பரிசு என்றால், விலை உயர்ந்த வைரங்கள் கொண்டு உருவாக்கப்பட்ட பெரிய வைர மோதிரம் தான். இந்த மோதிரத்தில் வீரர்கள் பெயர் மற்றும் அவர்களுடைய ஜெர்சி எண் எத்தனை அது மட்டுமின்றி 2024 உலகக்கோப்பையில் எத்தனை ரன்கள் எடுத்தார்கள்? எத்தனை விக்கெட் எடுத்தார்கள் என்பதும் பொறிக்கப்பட்டுள்ளது. அந்த மோதிரமும் இன்று வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.