ஹிஸ்புல்லா தலைவர் இறுதி சடங்கில்.. சட்டென பறந்த இஸ்ரேல் போர் விமானங்கள்.. திடீர் பரபரப்பு!

2 hours ago
ARTICLE AD BOX

ஹிஸ்புல்லா தலைவர் இறுதி சடங்கில்.. சட்டென பறந்த இஸ்ரேல் போர் விமானங்கள்.. திடீர் பரபரப்பு!

International
oi-Vigneshkumar
Subscribe to Oneindia Tamil

பெய்ரூட்: ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவராக இருந்த நஸ்ரல்லாவை கடந்த சில மாதங்களுக்கு முன்பு இஸ்ரேல் படை கொன்றது. இதற்கிடையே நஸ்ரல்லாவின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி நேற்று பெய்ரூட்டில் நடந்த நிலையில், அப்போது திடீரென அங்கு இஸ்ரேல் ராணுவ விமானங்கள் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

மத்திய கிழக்குப் பகுதியில் எப்போதும் மோதல் போக்கே நிலவி வரும். இடையில் சில காலம் அங்கு அமைதி திரும்பிய நிலையில், அது 2023 அக்டோபர் மாதம் ஹமாஸ் தாக்குதலால் முடிவுக்கு வந்தது.

Israel Hezbollah middle east

இஸ்ரேல் ஹமாஸ் மோதல்

அப்போது இஸ்ரேல் எல்லையில் நுழைந்த ஹமாஸ் படை சரமாரியாகத் தாக்குதலை நடத்தியது. இதில் பல நூறு இஸ்ரேல் மக்கள் கொல்லப்பட்டனர். மேலும், பலர் பணைய கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர். அதன் பிறகு ஹமாஸ் அமைப்பு மீது போரை ஆரம்பித்த இஸ்ரேல், காசாவில் சரமாரியாகத் தாக்குதலை நடத்தியது. இஸ்ரேல் நடவடிக்கையால் காசாவில் உள்ள அப்பாவி மக்கள் கொல்லப்படுவதாகச் சொல்லி, ஹிஸ்புல்லா படையும் ஹமாஸுக்கு ஆதரவாகக் களத்தில் குதித்தது.

இஸ்ரேல் மீதான தாக்குதல்களை ஹிஸ்புல்லா அமைப்பும் தீவிரப்படுத்தியது. ஹிஸ்புல்லா என்பது லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற அமைப்பாகும். இந்த அமைப்பு லெபனானில் இயங்கினாலும் கூட இதற்கான பொருளாதார உதவிகளையும் ஆயுதங்களையும் ஈரான் வழங்குவதாகவே கூறப்படுகிறது. ஹிஸ்புல்லாவும் தனது தாக்குதலைத் தொடங்க இஸ்ரேலும் இதற்கான பதிலடியைக் கொடுத்தது.

ஹிஸ்புல்லா படை

ஹிஸ்புல்லா படையினர் பதுங்கி இருக்கும் இடங்களில் தேடி தேடி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அதன்படி தான் கடந்த செப்டம்பர் மாதம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவராக இருந்த நஸ்ரல்லா கொல்லப்பட்டார். அதன் பிறகே தாக்குதல்கள் சற்று குறைந்தது. முதலில் இஸ்ரேல் ஹிஸ்புல்லா இடையே தான் அமைதி ஒப்பந்தமும் கூட கையெழுத்தானது.

டிரம்பை கைவிடும் இளவரசர் பின் சல்மான்? சவுதி நிலைப்பாட்டால் ஆடிப்போன அமெரிக்கா! இதை எதிர்பார்க்கல
டிரம்பை கைவிடும் இளவரசர் பின் சல்மான்? சவுதி நிலைப்பாட்டால் ஆடிப்போன அமெரிக்கா! இதை எதிர்பார்க்கல

ஹிஸ்புல்லா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தி கொண்ட நிலையில், இப்போது தான் அங்கு மெல்ல அமைதி திரும்பி வருகிறது. இதற்கிடையே நேற்று ஞாயிற்றுக்கிழமை லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. இதில் நஸ்ரல்லாவுக்கு இறுதி மரியாதை செலுத்தும் வகையில் பல ஆயிரம் ஹிஸ்புல்லா ஆதரவாளர்கள் திரண்டு இருந்தனர். அப்போது தான் அங்கு யாரும் எதிர்பார்க்காத சம்பவம் நடந்தது.

திடீரென பறந்த ராணுவ விமானங்கள்

ஆனால், இது எதோ எதிர்பாராத விதமாக நடந்த சம்பவம் இல்லை.. திட்டமிட்டே இஸ்ரேல் தனது போர் விமானங்களை இறுதி அஞ்சலி சமயத்தில் அனுப்பி இருக்கிறது. எந்தவொரு நபராக இருந்தாலும் இஸ்ரேலை எதிர்த்தால் அவர்களுக்கு இதுதான் கதி என்ற தெளிவான வார்னிங்கை அனுப்பவே இதுபோல ராணுவ விமானங்கள் மூலம் எச்சரித்ததாக அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கூறியுள்ளார்.

இஸ்ரேலில் மீண்டும் வெடிக்கும் போர்? அடுத்தடுத்து குண்டுவெடிப்பு! சிதறி ஓடிய மக்கள்! என்ன நடக்கிறது?
இஸ்ரேலில் மீண்டும் வெடிக்கும் போர்? அடுத்தடுத்து குண்டுவெடிப்பு! சிதறி ஓடிய மக்கள்! என்ன நடக்கிறது?

எச்சரிக்கை

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "நஸ்ரல்லாவின் இறுதிச் சடங்கு நடக்கும் போது பெய்ரூட் மேல் எங்கள் ராணுவ விமானங்கள் பறந்தன. இதன் மூலம் நாங்கள் தெளிவான மெசேஜ்ஜை அனுப்புகிறோம். அதாவது இஸ்ரேலை அழிக்க அல்லது அச்சுறுத்தித் தாக்கும் நபர், அது யாராக இருந்தாலும் அவர்களுக்கு இந்த கதி தான் ஏற்படும் என்பதே காட்டவே இதைச் செய்துள்ளோம்" என்றார்.

மத்திய கிழக்கில் இப்போது தான் மெல்ல நிம்மதி திரும்பி வருகிறது.. ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புகளுடன் போர் நிறுத்தத்தைக் கையெழுத்திட்டது. இந்த நேரத்தில் இஸ்ரேல் இதுபோல செய்வது தேவையற்ற பதற்றத்தையே ஏற்படுத்தும் என சிலர் எச்சரிக்கிறார்கள்.

More From
Prev
Next
English summary
Israel jets flew over the funeral of Hezbollah chief's aide in Beirut (ஹிஸ்புல்லாவை அச்சுறுத்த இஸ்ரேல் விமானங்கள் செய்த செயலால் பரபரப்பு): All things to know about Israel Hezbollah tension.
Read Entire Article