ARTICLE AD BOX

தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்த தினம் இன்று. இதனை அதிமுகவினர் மிகச் சிறப்பாக கொண்டாடிய நிலையில் இன்று சென்னை காமராஜர் சாலையில் உள்ள ஜெயலலிதா அம்மையாரின் சிலைக்கு ஓ பன்னீர்செல்வம் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அதிமுகவுக்கு மீண்டும் வரவேண்டும் என்று ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் விரும்புகிறார்கள்.
ஜெயலலிதா இருந்த வரையில் கட்சியை உச்சத்தில் நிலை நிறுத்தினார். ஆனால் அவருடைய மறைவுக்குப் பிறகு சூழ்ச்சி, வஞ்சகம், நம்பிக்கை துரோகம் ஆகியவற்றை தான் பார்த்தோம். அதிமுகவின் தொடர் தோல்விக்கு காரணம் ஒற்றை தலைமை வேண்டும் என்று சிலர் செயல்பட்டது தான். மனசாட்சி இல்லாமல் பேசுபவர்கள் எதை வேண்டுமானாலும் பேசலாம். மேலும் தமிழ்நாடு மக்கள் என்றென்றும் இரு மொழிக் கொள்கையை மட்டும் தான் விரும்புகிறார்கள் என்று கூறினார்.