ARTICLE AD BOX
சென்னை: சர்வதேச அளவில் பெரும் பாராட்டை பெற்ற ‘பாராநார்மல் ஆக்டிவிட்டி’ மற்றும் ‘தி பிளெய்ர் விட்ச் பிராஜெக்ட்’ படங்கள், ஃபவுண்ட் ஃபூட்டேஜ் (Found Footage) ஜானரில் எடுக்கப்பட்டவை. இந்த வரிசையில், தற்போது தமிழ் சினிமாவும் இந்த அற்புத ஜானரில் இணைந்துள்ளது. தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக ‘‘மர்மர்” உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தின் அறிவிப்போடு வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
இந்தப் படத்தை ஹேம்நாத் நாராயணன் எழுதி, இயக்கியுள்ளார். எஸ்.பி.கே. பிக்சர்ஸ் சார்பில் பிரபாகரன் மற்றும் ஸ்டான்ட் அலோன் பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளன. ‘உண்மைக்கும், கற்பனைக்கும் இடையில் உள்ள மெல்லிய கோட்டை அழிக்கும் வகையில், பிரத்யேக ஸ்டைல் மற்றும் நுணுக்கங்களை கொண்டு இந்தப் படம் ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை வழங்க இருக்கிறது’ என படக்குழு தெரிவித்துள்ளது. இந்த படத்தை மார்ச் மாதம் 7ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.