ஏஐ தான் எதிர்கால சினிமா: ஆர்.கே. செல்வமணி தகவல்

3 hours ago
ARTICLE AD BOX

சென்னை: ‘திவா’ என்கிற டிஜிட்டல் இண்டர்மீடியேட் விஷூவல் எபெக்ட்ஸ் அசோசியேஷன், 25வது சங்கமாக, பெப்சி என்கிற தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தில் இணைக்கப்பட இருக்கிறது. இதையொட்டி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், திவா துணை தலைவர் கலரிஸ்ட் முத்து, ஒடிஸி நிறுவனர் ஹர்ஷவர்தன், இயக்குனர் ஆர்.ரவிக்குமார் கலந்துகொண்டனர். அப்போது பெப்சி அமைப்பின் தலைவரும், இயக்குனருமான ஆர்.கே.செல்வமணி பேசியதாவது: திவாவின் அனைத்து நிர்வாகிகளுக்கும் வாழ்த்துகள். முன்பு நான் படங்கள் இயக்கியபோது, நான் நினைத்ததை முன்கூட்டியே பார்ப்பதற்காக நிறைய உடல் உழைப்பும், பண உழைப்பும் தேவைப்பட்டது. அதிலும் 40 சதவீதம் மட்டுமே பார்க்க முடியும். இன்று அது தொழில்நுட்பத்தின் உதவியால் 100 சதவீதமாக மாறியிருக்கிறது. பாரதிராஜா, கே.பாலசந்தர், ஸ்ரீதர் போன்ற இயக்குனர்களின் காலக்கட்டத்தில், சினிமா என்பது தொழில்நுட்பக் கலைஞர்களின் கட்டுப்பாட்டுக்கு வந்தது. பிறகு ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற நடிகர்களின் கட்டுப்பாட்டுக்குள் திரையுலகம் வந்தது. இப்போது 2025ல் இருந்து 2050 வரையிலான காலக்கட்டத்தில் சினிமாவை ஆளப்போவது விஎஃப்எக்ஸ், ஏஐ, சிஜி போன்ற தொழில்நுட்பங்கள் மட்டுமே என்பது உறுதியாகியுள்ளது.

Read Entire Article