ஸ்விக்கி, சோமேட்டோ.. ஆன்லைன் செயலி ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்பு

2 hours ago
ARTICLE AD BOX

ஸ்விக்கி, சோமேட்டோ.. ஆன்லைன் செயலி ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்பு

Delhi
oi-Mani Singh S
Subscribe to Oneindia Tamil

டெல்லி: உணவு டெலிவரி செய்யும் ஸ்விக்கி, சோமேட்டோ ஊழியர்களுக்கு அரசு சார்பில் அடையாள அட்டை வழங்க்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மேலும் இந்த திட்டத்தின் மூலம் 1 கோடி பேர் பயன்பெறுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். இ ஷ்ரம் இணையதளம் வாயிலாக பதிவு செய்து பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய நதி அமைச்சர் நிர்மலா சீதாரமன் இன்று பட்ஜெட் தாக்கல் செய்தார். சரியாக 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார். பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார்.

budget 2025 union budget 2025 nirmala sitharaman

அந்த வகையில் உணவு டெலிவரி செய்யும் ஸ்விக்கி, சோமேட்டோ ஊழியர்களுக்கு அரசு சார்பில் அடையாள அட்டை வழங்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 1 கோடி பேர் பயன்பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இ ஷ்ரம் இணையதளம் வாயிலாக பதிவு செய்து பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அடையாள அட்டை வழங்குவதன் மூலம், அமைப்பு சார தொழிலாளர்களாக உள்ள இந்த ஊழியர்களுக்கும் சமூக பாதுகாப்பு அளிக்கப்படும் வகையில் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனத் தெரிகிறது. கையில், கிக் (Gig) பணியாளர்கள் என அழைக்கப்படும் டெலிவரி ஊழியர்களுக்கான அறிவிப்பும் பட்ஜெட்டில் வெளியானது.

விபத்து, சுகாதாரம் போன்ற திடீர் பாதிப்புகளின் போது டெலிவரி ஊழியர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் திட்டங்களை வகுப்பது தொடர்பாக தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தி வருகிறது. எனவே, தற்போது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டத்தின் மூலம், இது தொடர்பான பலன்களும் கிடைக்க வழிவகை செய்யப்படும் என எதிபார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
English summary
Finance Minister Nirmala Sitharaman announced in the Union Budget that the government will issue identity cards to food delivery companies Swiggy and Zomato employees. She also said that 1 crore people will benefit from this scheme. It has been informed that the employees will be issued identity cards after registering through the e-Shram website.
Read Entire Article