பட்ஜெட் 2025: எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு? முழு விவரம் இதோ!

3 hours ago
ARTICLE AD BOX

பட்ஜெட் 2025: எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு? முழு விவரம் இதோ!

Delhi
oi-Vignesh Selvaraj
Subscribe to Oneindia Tamil

டெல்லி: 2025 - 2026 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதில் எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்கிற விவரங்களைப் பார்க்கலாம்.

அதிகபட்சமாக போக்குவரத்து துறைக்கு ரூபாய் 5.48 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புத் துறைக்கு ரூபாய் 4.91 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாய வளர்ச்சி மேம்பாட்டுக்கு ரூபாய் 1.71 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

budget 2025 union budget 2025 income tax nirmala sitharaman 2025

துறை வாரியாக நிதி ஒதுக்கீடு விபரம்

போக்குவரத்து - ரூபாய் 5.48 லட்சம் கோடி

பாதுகாப்புத்துறை - ரூ. 4.91 லட்சம் கோடி

ஊரக மேம்பாடு - ரூ.2.66 லட்சம் கோடி

உள்துறை - 2.33 லட்சம் கோடி

விவசாயம் - 1.71 லட்சம் கோடி

கல்வி - 1.28 லட்சம் கோடி

சுகாதாரத்துறை - 98,311 கோடி

நகர மேம்பாடு - 96,777 கோடி

தகவல் தொடர்பு - 95,298 கோடி

ஆற்றல் துறை - ரூ.81,174 கோடி

வணிகம் தொழில்துறை - 65,553 கோடி

சமூக நலன் - 60,052 கோடி

அறிவியல் வளர்ச்சி சார்ந்தவை - 55,679 கோடி

நிதி அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றுகையில், உலகின் பெரிய பொருளாதார நாடுகளின் வளர்ச்சியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. அனைவருக்குமான வளர்ச்சி என்ற நோக்கத்தில் அரசு செயல்படுகிறது. நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வளர்ச்சியை ஊக்குவிக்க நடவடிக்கை இனியும் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.

வாசித்து முடிப்பதற்குள்ளேயே மக்களால் குஷியாக கொண்டாடப்படும் பட்ஜெட் இதுதான்.. தமிழிசை சொன்ன மேட்டர்!
வாசித்து முடிப்பதற்குள்ளேயே மக்களால் குஷியாக கொண்டாடப்படும் பட்ஜெட் இதுதான்.. தமிழிசை சொன்ன மேட்டர்!

உலகத்தின் உணவு உற்பத்தி மையமாக இந்தியா வளர்ந்துள்ளது.வேளாண் உற்பத்தியை மேற்கொண்டு அதிகரிக்க மாநில அரசுகளுடன் கூட்டணியாக புதிய திட்டமிடப்பட்டுள்ளது. 1.70 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் திட்டங்கள் கொண்டுவரப்படும் என அறிவித்தார்.

ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தில் அரசு வழங்கும் பங்காக ஏற்கெனவே உள்ள ரூ.10,000 கோடியுடன் கூடுதலாக ரூ.10,000 கோடி ஒதுக்கப்படும். காலணிகள் மற்றும் தோல் துறையில் கவனம் செலுத்தும் வகையில் திட்டம் ஒன்று தொடங்கப்படும். இதன்மூலம், 22 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது எனத் தெரிவித்தார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

கல்வி திட்டங்கள்

பள்ளிகளில் குழந்தைகளிடையே அறிவியல் சிந்தனையை வளர்க்கும் வகையில் அடல் டிங்கெரிங் ஆய்வு மையங்கள் அமைக்கப்படும். நாடு முழுவதும் 50 ஆயிரம் ஆய்வு மையங்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் உருவாக்கப்படும். ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இணையத் தொடர்பை ஏற்படுத்துவதற்கு பிராட்பேண்ட் வசதி ஏற்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.

More From
Prev
Next
English summary
Union Finance Minister Nirmala Sitharaman presented the budget for the financial year 2025-2026. Here are the details of how much funding has been allocated to which sectors.
Read Entire Article