ARTICLE AD BOX
நடிகர் அஜித் குமாரின் விடாமுயற்சி திரைப்படத்தின் ’சவதீகா’ பாடலின் ரீலோடட் வெர்ஷன் விடியோ வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குநர் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் ஆக்ஷன் கதைக்களத்துடன் உருவாகியுள்ள ’விடாமுயற்சி’ திரைப்படத்தின் மூலம் மங்காத்தா படத்திற்குப் பிறகு நடிகை திரிஷா அஜித்துடன் இணைந்து நடித்துள்ளார்.
மேலும், இந்த திரைப்படத்தில் நடிகர் அர்ஜுன், ஆரவ், ரெஜினா கஸாண்ட்ரா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள இந்த படத்தில் பாடகர் அறிவு எழுதிய ’சவதீகா’ பாடலை ஆந்தோனி தாசன் பாடியுள்ளார். முன்னதாக, இப்பாடல் யூடியூபில் 22 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
இதையும் படிக்க: சர்வதேச திரைப்பட விழாவில் இயக்குநர் ராமின் ‘பறந்து போ’
கடந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு இந்த திரைப்படம் வெளியாகவிருந்த நிலையில் வருகின்ற பிப்.6 க்கு படக்குழுவினரால் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த பாடலின் ரீலோடட் வெர்ஷன் விடியோ இன்று (பிப்.1) வெளியிடப்பட்டுள்ளது. இந்த விடியோவில் பாடகர் அந்தோனி தாசனும், இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தரும் இணைந்து ஆடி பாடி வைப் செய்யும் விடியோவாக சித்தார்த் விஸ்வனாத் இயக்கத்தில் உருவாக்க்கப்பட்டுள்ளது.
இத்துடன், பாடல் வெளியாகிய 2 மணிநேரத்தில் சுமார் 1.5 லட்சம் பார்வைகளை இந்த விடியோ கடந்து வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.