ஸ்ரீ காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் ஆலயத்தில் மகா சிவராத்திரி

22 hours ago
ARTICLE AD BOX

கரூர் பெரிய ஆண்டாங் கோவில் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் ஆலயத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு மூலவர் மற்றும் அம்பிகைக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

மகா சிவராத்திரி முன்னிட்டு உலகத்தில் உள்ள பல்வேறு சிவாலயங்களில் நேற்று இரவு முழுவதும் நான்கு காலை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று தொடர்ச்சியாக பல்வேறு அலங்காரங்களில் சிவபெருமான் காட்சி அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் கரூர் மாவட்டம், பெரிய ஆண்டாங் கோவில் பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ காசி விசாலாட்சி உடனுறை ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயத்தில் மகா சிவராத்திரி முன்னிட்டு ஆலய மண்டபத்தில் சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து மூலவர் காசி விஸ்வநாதர் மற்றும் காசி விசாலாட்சி அம்பிகைக்கு எண்ணை காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு திருமஞ்சள், மஞ்சள், அபிஷேக பொடி, அரிசி மாவு, விபூதி, குங்குமம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதை தொடர்ந்து மூலவர் காசி விஸ்வநாதர் மற்றும் காசி விசாலாட்சி சுவாமிகளுக்கு யாக வேள்வியில் பூஜிக்கப்பட்ட புனித தீர்த்தத்தாலும் 108 சங்காலும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தொடர்ந்து சுவாமிக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த மூலவர் காசி விஸ்வநாதர்,காசி விசாலாட்சி அம்பிகைக்கு ஆலயத்தில் சிவாச்சாரியார் உதிரிப் பூக்களால் நாமாவளிகள் கூறிய பிறகு சுவாமிக்கு தீபங்கள் காட்டப்பட்டு, பல்வேறு பக்தி பாடல்கள் பாடியபடி பஞ்ச கற்பூர ஆலாத்துடன் மகா தீபாராதனை நடைபெற்றது.

கரூர் பெரிய ஆண்டாங் கோவில் அருள்மிகு ஸ்ரீ காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் ஆலயத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி சிறப்பு அபிஷேக நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சிறப்பு நிகழ்ச்சியை கண்டு களித்தனர். அதைத் தொடர்ந்து அனைத்து பக்தர்களுக்கும் உணவு மற்றும் சக்கர வள்ளி கிழங்கு மற்றும் பயிர் வகைகளையும், ருத்ராட்சை பிரசாதமும் ஆலயத்தின் சார்பாக வழங்கப்பட்டது.

கரூர் சின்ன தாதம்பாளையம் அண்ணாமலையார் திருக்கோவிலில் மகா சிவராத்திரி முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்.

இதேபோல், கரூர் அரவக்குறிச்சி சின்னதாதம்பாளையம் அருள்மிகு ஸ்ரீ அண்ணாமலையார் ஆலயத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி சிறப்பு அபிஷேக நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.

Read Entire Article