பயணிகளுக்கு குட்நியூஸ்! இந்த தென்மாவட்ட ரயில்களில் முன்பதிவில்லாத பெட்டிகள் இணைப்பு!

4 hours ago
ARTICLE AD BOX

தென்மாவட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பவில்லாத பெட்டிகள் இணைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம். 

இந்தியன் ரயில்வே பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தியை அறிவித்துள்ளது. தென்மாவட்ட ரயில்களில் கூடுதல் முன்பதிவில்லாத பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் ரயிலில் பல லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர். அதுவும் பண்டிகை காலங்கள் மற்றும் விடுமுறை காலங்களில் ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை மிக அதிமாக உள்ளது. பண்டிகை காலங்கள் மட்டுமின்றி சாதாரண நாட்களிலும் ரயிலில் முன்பதிவு டிக்கெட் கிடைப்பது என்பது குதிரை கொம்புதான். 

முன்பதிவில்லாத பெட்டிகள்

நீண்ட தூரம் களைப்பின்றி வசதியாக பயணம் செய்ய முடியும் என்பதால் மக்கள் ரயில் பயணத்தை விரும்புகின்றனர். முன்பதிவு டிக்கெட் கிடைக்காததால் ஏராளமான மக்கள் முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணம் செய்து வருகின்றனர். இதனால் முன்பதிவில்லாத பெட்டிகளில் கூட்டம் அலைமோதுகிறது. அதிலும் பெரும்பாலான ரயில்களில் முன்பதிவில்லாத பெட்டிகள் இரண்டு மட்டுமே இருப்பதால் மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். 

முன்பதிவில்லாத பெட்டிகளில் போதிய இடம் இல்லாததால் பொதுமக்கள் முன்பதிவு பெட்டிகளிலும், ஏசி வசதி கொண்ட பெட்டிகளிலும் ஏறி வருகின்றனர். இந்நிலையில், 10 ரயில்களில் முன்பதிவில்லாத பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில், ''தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் (வண்டி எண்: 20681) கூடுதலாக இரண்டு முன்பதிவில்லாத பெட்டிகள், ஒரு முன்பதிவு பெட்டி மார்ச் 1ம் தேதி முதல் ஜூன் 18ம் தேதி  வரை இணைக்கப்பட்டு இருக்கும்.

சென்னையில் மினி பேருந்து.! எந்த எந்த வழித்தடத்தில் இயங்கப்போகிறது- ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

செங்கோட்டை-தாம்பரம்

மறுமார்க்கமாக செங்கோட்டை-தாம்பரம் ரயிலில் (வ.எண்: 20682) இதேபோல் கூடுதலாக இரண்டு முன்பதிவில்லாத பெட்டிகள், ஒரு முன்பதிவு பெட்டி மார்ச் 1ம் தேதி முதல் ஜூன் 19ம் தேதி  வரை இணைக்கப்பட்டு இருக்கும். தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலில் (வ.எண்: 22657)  இரண்டு முன்பதிவில்லாத பெட்டிகள் மற்றும் ஒரு முன்பதிவு பெட்டி மார்ச் 2ம் தேதி முதல் ஜூன் 16ம் தேதி வரை இணைக்கப்பட்டு இருக்கும்.

மறுமார்க்கமாக நாகர்கோவில்-தாம்பரம் ரயிலில் (வ.எண்: 22658) இரண்டு முன்பதிவில்லாத பெட்டிகள் மற்றும் ஒரு முன்பதிவு பெட்டி மார்ச் 3ம் தேதி முதல் ஜூன் 17ம் தேதி வரை இணைக்கப்பட்டு இருக்கும். திருச்சியில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் (வ.எண்: 22627) ஒரு முன்பதிவில்லாத பெட்டி மார்ச் 2ம் தேதி முதல் மார்ச் 18ம் தேதி இணைக்கப்பட்டு இருக்கும். மறுமார்க்கமாக திருவனந்தபுரம்-திருச்சி ரயிலில் (வ.எண்: 22628) ஒரு முன்பதிவில்லாத பெட்டி மார்ச் 5ம் தேதி முதல் மார்ச் 19ம் தேதி இணைக்கப்பட்டு இருக்கும். 

திருவனந்தபுரம்-குருவாயூர்

இதேபோல் திருவனந்தபுரம்-குருவாயூர் (வ.எண்: 16342), குருவாயூர்-திருவனந்தபுரம் (வ.எண்: 16341) ஆகிய ரயில்களிலும் கூடுதலாக ஒரு முன்பதிவில்லாத பெட்டி இணைக்கப்படுகிறது. மேலும் கண்ணூர்-எர்ணாகுளம் (வ.எண்: 163036), ஆலப்புழா-கன்ணூர் (வ.எண்: 16307) ஆகிய ரயில்களிலும் கூடுதலாக ஒரு முன்பதிவில்லாத பெட்டி இணைக்கப்படுகிறது.

ஏசி பெட்டியில் அதிக வருவாய் அள்ளிய ரயில்வே! ஸ்லீப்பர் கோச் புக்கிங் சரிவு!

Read Entire Article