வாரந்தோறும் 35 கி.மீ மார்ச்: புதுச்சேரி டி.ஜி.பி. உத்தரவு; ஐ.ஆர்.பி.என். போலீசார் அதிருப்தி

4 hours ago
ARTICLE AD BOX

புதுச்சேரி ஐ.ஆர்.பி.என்., பிரிவு போலீசார் மீதான தொடர் புகார் காரணமாக வாரந்தோறும் 35 கிலோ மீட்டர் அணிவகுப்பு செல்ல டி.ஜி.பி., உத்தரவு விட்டுள்ளார்.

Advertisment

புதுச்சேரி காவல்துறையில் கடந்த 2005 ஆம் ஆண்டு ஐ.ஆர்.பி.என்., பிரிவு உருவாக்கப்பட்டது. இதில், 800-க்கும் மேற்பட்ட போலீசார் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், ஐ.ஆர்.பி.என்.,கள் சட்டம் ஒழுங்கு போலீசாருடன் இணைந்து பணியாற்றும் போது பல்வேறு பிரச்னைகளை உருவாக்குவதாகவும், ஐ.ஆர்.பி.என்., பிரிவு உருவாக்கப்பட்ட நாளிலிருந்து, இதுவரை வெளி மாநிலத்திற்கு சென்று எந்தவித பாதுகாப்பு பணியில் ஈடுபடாமல் இருப்பதாகவும், பல்வேறு புகார்கள் வந்தது.

இதனால், ஐ.ஆர்.பி.என்., போலீசார் வாரம் ஒருநாள், புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் வரை 35 கிலோ மீட்டர் துாரத்திற்கு நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என புதுச்சேரி டி.ஜி.பி., ஷாலினி சிங் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, வரும் 5 ஆம் ம் தேதி முதல் ஐ.ஆர்.பி.என்., போலீசார் திண்டிவனம் சென்று வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஐ.ஆர்.பி.என்., போலீசார் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி. 

Read Entire Article