ARTICLE AD BOX
நமக்குத்தேவை முதலில் இறை நம்பிக்கை. அதன் பிறகு ஞானம். இறை நம்பிக்கை உடையோர் கடைசி வரை நல்வாழ்வு வாழ்வார்கள். மிகுந்த இருண்ட நாட்களிலும் தவறாது வழிகாட்டியாக இருக்கக்கூடியது இறை நம்பிக்கையே.
நீ எடுத்துக்கொண்ட வேலையை முழுமனதுடன் செய். இறைவன் அருள் துணை நிற்கும். செய்ய வேண்டிய வேலை ஒன்று இருக்கும்போது அதை பற்றி எவ்வளவு குறைவாக பேசுகிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது.
இறைவன் எல்லா மனிதர்களையும் ஒன்று போலவே நேசிக்கிறான். ஒருவன் இறைவனின் அன்பை கண்டு கொண்டபோது அவன் எல்லாவற்றிலும் இறைவனையே அன்பு செய்கிறான். இனி பிரிவினையே இல்லை.
கடவுளின் காட்சி கிடைக்கவில்லையே என்ற ஒரே காரணத்திற்காக பழக்கமாக செய்து வரும் ஜெபம் தியானம் முதலான ஆன்மீக பயிற்சிகளை விட்டு விடாதீர்கள்.
மீன் பிடிப்பவன் தூண்டிலை தண்ணீரில் வீசிய அடுத்த வினாடியா மீனைப் பிடித்துவிடுகிறான். பலமுறை மீன் தூண்டில் போட்டு கைக்கு கிடைக்காமல் ஏமாற்றம் அடைகிறான். என்றாலும் மீன் கிடைக்கும் வரை முயற்சி செய்கிறான். நாமும் கடவுள் கண்முன் தெரியும்வரை ஆன்மீக முயற்சியை தொடர்ந்தபடி இருக்கவேண்டும்.
நல்லது கெட்டது பாராமல் யாரேனும் உங்கள் மனதை அல்லது உணர்வை காயப்படுத்தி இருக்கலாம். ஆனால் அதை நீங்கள் கண்டு கொள்ளாமல் இருந்து விடுங்கள். அவமதிப்புகளால் உங்களை அசைத்து விட முடியாது. நீங்கள் எதற்கும் அசைந்து கொடுக்க வேண்டியது இல்லை. மறுவார்த்தை பேசாதிருங்கள். எல்லா இழிவுகளும் உங்களை தீண்ட முடியாமல் உங்கள் காலடியில் விழும். உங்கள் இதயத் துடிப்புகளை நீங்கள் சீராக வைத்திருக்க முடியும். குறைந்தபட்ச இடையூறு என்பதை விட உங்களுடைய இந்த அணுகுமுறை சக்தி வாய்ந்ததாக இருக்கும்.
தெய்வம் இல்லை என்று சொல்லிக் கொண்டிருப்பது சுலபம் ஆனால் உயிர் இல்லை என்று சொல்ல முடியாது அல்லவா? தெய்வமும் உயிரும் ஒன்றுதான்.
அடுத்து அவருடைய நடத்தையை கண்டு நீங்கள் அதிர்ச்சியுறுன் போதெல்லாம் அவர்களை நிலைக்கண்ணாடியாவும் அதில் தெரிவது நாம்தான் என்றும் எண்ணிக் கொள்ளுங்கள். அப்போது உங்களிடம் உள்ள பலவீனங்கள் எளிதாக உங்களுக்கு தெரிய வரும்.
உடல் என்பது தாயின் வழியே இறைவன் வழங்கியது. அந்த உடலை தூய்மையுடனும் ஆரோக்கியத்துடனும் உள்ளத்தில் அழுகற்றும் வைத்துக்கொண்டு அவன் அடி சேரும் வரை எவ்வித குற்ற உணர்வு இன்றி வாழவேண்டும்.
இறைவனுக்கு தொண்டு செய்யுங்கள். இதை விட சிறந்த மகிழ்ச்சி ஏதுமில்லை இறைவனிடம் உனக்கு தூய்மையான கலப்பில்லாத அன்பிருந்தால் மற்றவர்களுடைய மனத்தாங்கல் கெட்ட எண்ணங்கள் ஆகியவற்றிலிருந்து உன்னை எப்படி காப்பது என்பதை அவரிடமே விட்டுவிடு.
இறைவனுக்கு சொந்தமானவன் எதைக்கண்டு அஞ்ச வேண்டும். அச்சம் ஒரு மாசு அற்பமான பலவீனமான அச்சம் எனும் சிறுமைக்கு ஒருபோதும் இடம் அளிக்க கூடாது.
தொகுப்பு; ஆர். ஜெயலட்சுமி