ARTICLE AD BOX
பராசக்தி படக்குழுவின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிவகார்த்திகேயனின் 25 வது படமாக உருவாகும் திரைப்படம் தான் பராசக்தி. இந்தப் படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இறுதிச்சுற்று, சூரரைப் போற்று ஆகிய படங்களை இயக்கிய சுதா கொங்கரா இயக்கி வருகிறார். இதில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக நடிக்கிறார். மேலும் அவருடன் இணைந்து அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ரவி மோகன் வில்லனாக நடிக்கிறார். இந்த படமானது கடந்த 1965 காலகட்டத்தில் நடந்த இந்தி திணிப்பு போராட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு மதுரை, சிதம்பரம், காரைக்குடி போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அடுத்தது இலங்கையில் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில் சிவகார்த்திகேயன், அதர்வா, ரவி மோகன் ஆகியோர் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்கிறார். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில் இப்படத்தின் டைட்டில் டீசரும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.