வைபவ் நடிக்கும் ‘ஆலம்பனா’…. புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

2 hours ago
ARTICLE AD BOX

வைபவ் நடிக்கும் ஆலம்பனா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.வைபவ் நடிக்கும் 'ஆலம்பனா'.... புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் வைபவ் தமிழ் சினிமாவில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சரோஜா, கோவா, மங்காத்தா ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களுக்கு பரீட்சையமானவர். அதைத் தொடர்ந்து இவர் மேயாத மான், கப்பல், லாக்கப் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்து பெயர் பெற்றார். தற்போது இவர் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் இவர், ஆலம்பனா எனும் ஃபேண்டஸி பொழுதுபோக்கு திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க இப்படத்தில் முனிஷ்காந்த், ரோபோ சங்கர், பாண்டியராஜன், பார்வதி நாயர் ஆகியோர் வைபவுடன் இணைந்து நடித்திருக்கின்றனர்.  ஹிப் ஹாப் ஆதி இந்த படத்திற்கு இசையமைக்க வினோத் ரத்னசாமி இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். வைபவ் நடிக்கும் 'ஆலம்பனா'.... புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வருடங்களுக்கு முன்பாகவே தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்ற முடிந்தது. அதன் பின்னர் பலமுறை இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இப்படம் 2025 மார்ச் 7ஆம் தேதி திரைக்கு வரும் என படக்குழு புதிய ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது.

Read Entire Article